கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி.கோபிநாத் எழுதியுள்ள கடிதத்தில்
கனமழை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளைத் தவிர்த்து, சென்னையில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் அனைத்துத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளில் பணிபுரியும், மாற்றுத்திறன் அரசுப் பணியாளர்களின் நடைமுறைப் பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் மழைக் காலங்களில் அவர்களால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பணிகள் துறை உட்பட தமிழக அரசின் அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும், மாற்றுத் திறன் அரசுப் பணியாளர்களுக்கு, இதுபோன்ற பெருமழை மற்றும் பேரிடர்க் காலங்களில் சிறப்பு விடுமுறை அல்லது பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளித்து உத்தரவிட தமிழக முதல்வரை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி.கோபிநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.