Aran Sei

கோடீஸ்வரர்களின் விண்வெளி சுற்றுப்பயணம் – முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளம்

“நாங்கள் இதைச் செய்ய முடிந்தால், வேறு என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.” இதுதான் மிகப்பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் ப்ரான்சனின் நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணத்தின் மகிழ்ச்சியான செய்தி. இதனை அவர் தனது அண்மையில் துணை சுற்றுவட்டப்பாதை  விண்கலமான விஎஸ்எஸ் யுனைட்டியில் சென்று வந்த விண்வெளி சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கூறியுள்ளார். அவர் விரும்பிய காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக பிரான்சன் நடத்திய வித்தையின் முழக்கமும், அதை சூழ்ந்துள்ள பரந்த சூழ்நிலைகளும் உண்மையில் இந்தப் பயணத்தின் உண்மையானப் பொருளையும், அதன் நோக்கத்தையும் கச்சிதமாக மூடி மறைத்துப் பாதுகாத்துள்ளன.

மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பாஜகவினராக செயல்படுகின்றனர் – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மக்கள் சுட்டிக்காட்டி உள்ளது போல் விர்ஜின் காலடிக்ஸின் பிரான்சன், டெஸ்லாவின் எலான் மஸ்க் மற்றும் அமேசானின் ஜெஃப் பெஸோஸ்(தனது பயணத்தைத் தற்போது தனியாக நடத்தி இருக்கிறார்) ஆகிய மூவரும் நடத்திய  சிறுநீர் கழிப்புப் போட்டியில் தொழில்நுட்ப ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட புதுமை என்கிற வகையிலோ புதியது எதுவும் இல்லை. ஏனெனில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே 20 மில்லியன் டாலர்கள் செலவிட்டு பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு முதன் முதலில் அதிகார பூர்வ  சுற்றுலாப் பயணியாகச் சென்று வந்தவர் கோடீஸ்வரர் டென்னிஸ் டிட்டோ. பிரான்சனின் துணை சுற்றுவட்டப்பாதை பயணம், 1961 லேயே ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் புவியைச் சுற்றி வந்த சுற்று வட்டப்பாதையின் நீளத்தை விட சில நிமிட தூரம்தான் குறைவு என்பதுடன், பிரான்சனின் பயணம்  காகரின் விண்வெளியில் செலவழித்ததை விட சுமார் இரண்டு மணிநேரம் மிகவும் குறைவானதாகும்.  இந்த வகையில் பார்த்தால், இந்த கோடீஸ்வர்களின் விண்வெளி ஓட்டப்பந்தயம் உண்மையான கண்டுபிடிப்பாகவோ அல்லது முன் மாதிரியாகவோ  இல்லை.

பெகசிஸ் ஸ்பைவேரால் பிரான்ஸ் அதிபர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தி – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்

விண்வெளியை உலகின் ஊதாரி பணக்காரர்களின் உல்லாச விடுதியாக மாற்றுவதுதான் இதில் புதுமையானது. எதிர்காலத்தில் அறிந்து கொள்ள இயலாத அளவு செல்வம் பெருகிவிட்ட ஒரு வகைக் கூட்டம் தங்களுடைய கோடீஸ்வர செழுமையின் பாரம்பரிய சின்னங்கள் இனியும் பொருத்தமானவையாக, போதுமானவையாக இல்லாத காரணத்தால் இன்பச் சுற்றுலா கலத்திற்குள் இன்னொரு கலத்தில் ஏறி வெப்ப மண்டலத்தில்  தற்பெருமை பயணம் மேற்கொள்ள முனைந்துள்ளனர். அவர்களின் பொது உறவு பிரிவுகளின் எதிர்காலம் சார்ந்த சுழற்சிக்கு மாறாக, கேள்விக்குரிய புதிய எல்லை அவர்கள் எப்போதும் சாதாரணமானது மற்றும் புவிக்குரியது எனக் கூறிக் கொண்டு வருவது போன்று, விண்வெளியை அல்லது புவியில் நாம் உயிர்வாழ்வதற்கான மீறிய நிலையை ஜனநாயகமாக்குவது என்பதல்ல, மாறாக பொதுவான உள் முதலாளித்துவப் போட்டியை அளவிடும் கற்பனை பதிப்பாகும்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

அவர்கள் என்னதான் முத்திரை குத்தினாலும்,  ‘மதர் போர்டின்’ எட்வர்டு ஓங்வெசோ ஜூனியர் குறிப்பிடுவது போல பிரான்சன் போன்றவர்களின் இது போன்ற முயற்சிகள் முக்கியமாக முதலீட்டாளர்களை திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வாகும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு,  இலாபந்தரும் அரசாங்க ஒப்பந்தங்களுக்காக அவர்கள் சவாரியும் செய்கிறார்கள். இதில் மிகப் பெரிய அவலம் என்னவென்றால், தனியார் விண்வெளித் துறை உண்மையில் கோடிக்கணக்கான பொது மக்கள் வரிப்பணத்தைக் கொண்டே  நடத்தப்படுகின்றது. ஆயினும் கோடீஸ்வரர்களின் விண்வெளிப் பந்தயத்தின் மிகப் பெரிய ஒற்றைத் தடை என்பது, வரலாற்று ரீதியான சமத்துவமின்மையை நன்கு அறிந்த மாணவர்களுக்கு கூடுதல் தகவலாகும். மஸ்க், பிரான்சன், பொசோஸ் போன்ற அமெரிக்க தங்க முலாம் பூசிய காலத்தின் ( எண்ணற்ற துயரங்களின் மேல் செழுமை என்பதை  முலாமாக பூசிய காலம்) ஏகபோக முதலாளிகள் துவக்கத்தில் தங்கள் எதிர்காலத்தின் வாடகையாளர்களாகவே இருந்தனர்‌. கண்டுபிடிப்பாளர்களாக இல்லை. நாட்டின் விரிவடைந்து வரும் தொழில் துறை உள்கட்டமைப்பில்  புதிய நிலப்பிரபுத்துவ பிரபுக்களாகி நிதிப் பலனை அறுவடைச் செய்துக் கொண்டிருந்தார்கள். இன்று நீராவிக் கப்பல்கள், தொடர்வண்டி மற்றும் தந்தி வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் இடத்தை பிடித்துள்ள உலகளாவிய தொலைத் தொடர்பு மற்றும் திகிலூட்டும் இராணுவ (பெயர்கூடத் தெரியாத) தளவாடங்களின் வளர்ந்து வரும் சந்தை, அதன் இயல்பிலேயே எப்போதும் பொது மக்கள் நலன் என்ற பெயரிலேயே விற்கப்படும்.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

மிகவும் நேரடியாகவே, முதலாளித்துவ யுகத்தின் அதீத செல்வவளம் நிலையான மற்றும் அவநம்பிக்கையான போராட்டம் என்ற வரையறைக்குட்பட்டது. கோடீஸ்வரர்களுக்கு எப்போதும் பொது வெளியில் காட்டுவதற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. குறைந்தது இப்போதைக்கு தக்க ஆவணங்களை சொந்தமாக்கிக் கொள்வதும், உபரி மதிப்பை அபகரிப்பதும் அவர்களுக்கு மலையை மாவாக்கும் வேலைதான். மறுபுறம், செல்ல சீமான்களின் ஆட்சி அதிகார நாட்டமும், அவர்களை சுற்றியுள்ள அழுகிய அசாத்தியமான வாழ்க்கை முறைகளும் ஒரு முற்போக்கான மனித செயல்திட்டத்தின் நீட்டிப்பாகத் தொகுக்கப்படலாம். தனியார் தீவுகள் மீதான ஆசை, ஆடம்பரமான தோட்டங்கள் மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் மாடாய் வேலை வாங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பில் தன் முதல் காலடியை எடுத்து வைக்கும் ஆடம்பரமான மற்றும் மோசமான நோக்கங்களுடன் இணைத்து நியாயப்படுத்தலாம்.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

நிலைமைத் தீவிரமாகி வரும்போது, பல கோடிக்கணக்கானவர்கள் இந்த உலகளாவிய தொற்று நோய் நெருக்கடியில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கும் போது, பிரான்சனின் தீவிர சாத்தியக்கூறு என்ற கசப்பான அறிவிப்பு நவீன தாராளமய யுகத்தில் முதலாளித்துவ வீழ்ச்சியின் இறுதி அடையாளமாகவே இருக்கிறது. இது 1789 ம் ஆண்டு வெர்செயில்ஸ் மாளிகையில் நடந்த வசந்தகால களியாட்டங்களின் எல்லா பொறிகளையும் கொண்ட போலி எதிர்காலம் பற்றிய விளம்பரம் ஆகும். அவர்கள் எத்தனை வெளிப்படையாக ஜனநாயக முத்திரை குத்தினாலும், பிரான்சனின் முயற்சிகள் போன்றவை விண்வெளியில் மனிதகுலத்திற்கான எந்த விதமான உண்மையான எதிர்காலத்தையும் முன்னிலைப்படுத்த வாய்ப்பில்லை. (மேலும் அவர்கள் எப்படியாவது செய்தார்கள் என வைத்துக் கொண்டாலும் அது ஸ்டார் ட்ரெக் தொடரை விட எலைசியம்(அறிவியல் புனைக்கதை) திரைப்படம் போலத்தான் இருக்கும்.)

அவர்கள் ஆழமடைந்து வரும் சமத்துவமின்மையின் எதிர்காலம் குறித்து நமக்கு எச்சரிக்கையும் செய்கிறார்கள். 21 ம் நூற்றாண்டின் செல்வ சீமான்களின் தலையாய  முயற்சி தங்களது வணிக நலன்களும் தனிப்பட்ட முயற்சிகளும், பொதுவான சமூக நோக்கத்தின் விரிவாக்கமே அன்றி மோசடியான வழியில் வந்த செல்வம் உழைப்பின்றி பெற்ற அதிகாரம் அல்ல என்று காட்டுவதற்கான மாயையில் நம்மை வீழ்த்துவது ஆகும்.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

இந்த வகையில், 86 கி.மீ. தூரத்திலிருந்து -“இதைச் செய்ய முடிந்தால் வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்”- என்பது போன்ற ஒளிமயமான அறிவு கூர்மையுடன்  வழங்கப்பட்ட வார்த்தைகள் அவராலும் அவரது பிரிவினராலும் பயன்படுத்தப்பட்ட சலுகைகள் பற்றிய நேரடியான அறிக்கையாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கூடிய விரைவில், மற்றவர்களாகிய நாம் இனி கற்பனை செய்ய வேண்டியதில்லை.

www.jacobinmag.com இணையதளத்தில் லூக் சாவேஜ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்