பிரதமர் நரேந்திர மோடியின் மலிவுவிலை இணைய சேவை குறித்த கருத்தை விமர்சித்துள்ள உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மக்களின் தேவைகளுக்கு டேட்டாக்கள் மட்டும் போதாது என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் (மே 2), பெர்லினில் இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் மலிவான மற்றும் வேகமான இணைய சேவை இருப்பதாக பேசியிருந்தார்.
“இந்தியாவில் உள்ள இணைய சேவையின் வேகமானது எவ்வளவு மலிவானது. அது பெரும்பாலான நாடுகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது” என்று அவர் கூற, அங்கிருந்த மக்கள் கைதட்டினர்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது மலிவான இணைய சேவையை அவருக்கு என்ன செய்யும்? ஒருவருக்கு மலிவான பெட்ரோல், டீசல், எரிவாயு, பருப்பு, அரிசி, எண்ணெய், நெய், மாவு ஆகியவைதான் தேவை. ஏனெனில் டேட்டாக்கள் மட்டுமே வயிற்றை நிரப்பாது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
सस्ता पेट्रोल-डीज़ल, गैस, दाल, चावल, तेल, घी और आटा भी हो न कि केवल डेटा… क्योंकि डेटा से पेट नहीं भरता.
सवाल ये है कि:
जब हैं भूखे पेट, तो क्या करेगा नेट.
विदेशों में सम्पन्न लोगों से ताली बजवाना और देश में विपन्न आदमी की थाली सजवाना… दो अलग-अलग बातें हैं. pic.twitter.com/N9t52RBLnO
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 3, 2022
பணக்காரர்கள் கைதட்டுவதும், ஏழைகள் உங்களுக்கு சேவை செய்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடியின் அந்த உரையையும் அகிலேஷ் யாதவ் இணைத்துள்ளார்.
உங்க உளறலை நிப்பாட்டுங்க கங்கை அமரன்| சுந்தரவள்ளி நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.