Aran Sei

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம், விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி உள்ளாட்சி தேர்தல் – இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இஸ்லாமியர் வெற்றி

இந்த விவகாரம் தொடர்பாக, வெவ்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அயோத்தி பவன் பாண்டே மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில், 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் , 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும், அடுத்த 5-10 நிமிடங்களிலேயே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் குழுவானது, அதே நிலத்தை 18.5 கோடி வாங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம்: இலங்கை சீதை கோயிலில் இருந்து வரும் கல்

இதுகுறித்து தெரிவித்துள்ள அயோத்தி பவன் பாண்டே,”ராமர் கோவில் கட்டும் குழுவானது ராமபக்தர்களை ஏமாற்றியுள்ளது,நிலத்தின் பெயரால் இந்த கொள்ளை நடந்துள்ளது” இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்