Aran Sei

‘தென்மாவட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவான நடவடிக்கை வேண்டும்’ – தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

தென் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வேண்டுகோள் விடுத்து மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்’ – பிரதமருக்கு வைகோ கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க வழிவகை செய்யும் “சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பகுதி -1” எனும் திட்டத்திற்கு, தமிழக அரசால் 30.01.2017 இல் நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 06.12.2017 முதல் வேலைகள் நடந்து வருகின்றன. உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் அம்ரூட் (AMRUT) திட்டத்தின் கீழ் ரூபாய் 543 கோடி நிதி உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

மேலும், மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில் வசிக்கும் 4,35,150 பேருக்குக் குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்ட இத்திட்டப் பணிகள் நிறைவுபெறும் போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பது இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.
என்று தன் கடிதத்தில் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்த தங்களின் குமுறல்களை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் காட்டியதை அறிய முடிந்தாகவும் , மேலும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில், திட்டப் பணிகளை குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தக்க உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென மதிமுக தலைவர் வைகோ கோரியுள்ளார்.

பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: மதவாத பாசிசத்தை எதிர்பவர்களை ஒடுக்கும் பாஜகவுக்கு கிடைத்த சவுக்கடி என வைகோ கருத்து

இத்திட்டத்தில் பயன்பெறும் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபட்டி, கீழத் திருவேங்கடம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து, இத்திட்டத்தில் கிடைக்கப் பெறும் தண்ணீரை வழங்கிடவும் வேண்டுமெனவும், அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக என் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர் எனவும் வைகோ தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வேண்டுகோள் விடுத்து மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்