Aran Sei

மத ரீதியிலான ஆடைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது: தெற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவு

பிப்பிரவரி 21 அன்று டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைப் பற்றி அறிந்த பிறகு, தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் கீழ் இயங்கும் பள்ளிகளின் மாணவர்கள் “மத ரீதியிலான உடைகளை” அணிந்து வரக்கூடாது என்று அதன் கல்விக் குழுத் தலைவர் நிகிதா ஷர்மா கடிதம் எழுதியுள்ளார். நிகிதா சர்மா, துவாரகாவின் பாஜக கவுன்சிலராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப்பை கழற்ற வற்புறுத்தப்பட்ட மாணவி பேசும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்த மாணவியின் தந்தை அய்யூப், பள்ளியின் முதல்வரை அணுகி, சீருடை சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காட்டுங்கள் அல்லது கேமாராவின் முன் இந்த விளக்கத்தைச் சொல்லுங்கள் என்று கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் சீக்கிய மாணவியின் தலைப்பாகையை நீக்க கூறிய கல்லூரி நிர்வாகம் – சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம்

இது போன்ற மற்றொரு சம்பவம் இங்கு நடைபெறாமல் இருப்பதற்காக இந்த கடிதத்தை எழுதியதாக நிகிதா ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் அதில், மாணவர்கள் அனைவரும் தங்களது சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்து வரக் கூடாது என்று நிகிதா ஷர்மா பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தலைப்பாகை அணியும் மாணவர்களுக்கும் இந்த முடிவு பொருந்துமா என்று கேள்வி கேட்டதற்கு, தலைப்பாகை இந்த வரம்புக்குள் வராது என்று நிகிதா ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்