Aran Sei

ராமர் கோவில் நில ஊழல்: ஆவணங்களை ஒப்படைக்க தயார் – ஆம் ஆத்மி எம்.பி ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கடிதம்

யோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியது குறித்து எழுந்துள்ள புகார் தொடர்பான ஆவணங்களை நேரில் ஒப்படைக்க, ஆர்.ஆர்.எஸ் தலைவர் நேரம் ஒதுக்கவேண்டுமென ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்கள் அவை உறுப்பினர் சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், புலனாய்வு அமைப்புகள் எல்லாம் எங்கே? என் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

அதுமட்டுமின்றி, ராமர் கோவில் கட்டும் குழுவுடன் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி,  நிலம் வாங்கியதில் ஊழல் எழுந்துள்ள  புகார்குறித்து ஏன் எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை என்று சஞ்சய் சிங் கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.ஆர்.எஸ் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் தொடர்பாகத் தெரிவித்த அவர், இந்த முறைகேட்டில் தொடர்புடைய பாஜக உறுப்பினர்கள் மற்றும் ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளை குழு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் நேரம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில், 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள், 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும், அடுத்த 5-10 நிமிடங்களிலேயே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் குழுவானது, அதே நிலத்தை 18.5 கோடி வாங்கியுள்ளதாகவும் ஆம் ஆத்மி,சமாஜ்வாதி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்