Aran Sei

‘கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக  செயல்படும் ஒன்றிய அரசு’ – ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளை நிர்பந்திக்கும் ஒன்றிய அரசின் முடிவு, ‘கூட்டுறவு கூட்டாட்சி கொள்கை’க்கு எதிரானது என ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனாவை சமாளிக்க மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “1.57 கோடி பயனாளர்களைக் கொண்ட 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்த ஆகும் நிதிச்சுமை ரூ. 1,100 கோடிக்கும் மேல் இருக்கும். 12 முதல் 18 வயதினருக்கும் மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில், அது மேலும் மேலும் பலஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமையை அதிகரிக்கும். கொரோனா தொற்றால் மாநிலத்தின் நிதியாதாரம் பெரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தகைய தொகை செலவிடுவது கடினமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

‘எனது வழக்கு சட்டப்படி விவாதிக்கப்பட்டதைவிட அரசியல் ரீதியாகவே விவாதிக்கப்பட்டுள்ளது’ – பிணை வேண்டி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு

மேலும், “சுதந்திர இந்திய வரலாற்றில் மாநிலங்களுக்குத் தாங்களாகவே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது இருக்கலாம். அத்தகைய ஆணை, ஒரு வருடத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த தேசமும் போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சவாலான மற்றும் முன்னோடியில்லாத சூழ்நிலையின் கீழ், கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது” என குறிப்பிட்டுள்ளார்.

”விரைவான மற்றும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கும் ’முதன்மையான தடையாக’ இருப்பது மாநிலத்தின் தேவைக்கும் குறைவாக வழங்குப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை தான். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான அளவிலான தடுப்பூசிகளே வழங்கப்பட்டு வருகிறன்றன. இது ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைப் பொருத்து உள்ளது. பற்றாக்குறையான விநியோகம் காரணமாக, தடுப்பூசி செலுத்தும் வேகம் விரும்பும் வகையில் இல்லை மற்றும் இது தடுப்பூசி செலுத்தும் உந்துதலின் நோக்கத்தையே தோற்கடிக்கிறது.” என அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

‘ஒன்றிய அரசின் தடுப்பு மருந்து கொள்கை என்ற கூர் கத்தி இந்திய மாதாவின் இதயத்தை குத்துகிறது’ – ராகுல் காந்தி விமர்சனம்

”வேறுபட்ட விலையைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஹேமந்த் சோரன், “18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை, ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும் விலை, 45 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்காக கொள்முதல் செய்யும் விலைகளைவிட அதிகமாக உள்ளது. இந்த இருவேறு விலைகளை நியாயப்படுத்தலை இந்திய அரசியலமைப்பின் கீழ் ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

”தடுப்பூசி பாதுகாப்பிற்கான முன்னுரிமைகளை வரையறுக்கும் உரிமைகளை மாநில அரசிடமே வழங்குங்கள். இது எதிர்பார்க்கப்படும் கொரோனா 3வது அலையைச் சமாளிக்க உதவும். இது போன்ற கடுமையான காலங்களில் உங்கள் அன்பான ஆதரவிற்கு ஜார்கண்ட் மாநிலமும், அதன் மகக்ளும் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்” என அந்தக் கடித்ததில் ஜார்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரன் எழுதியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்