Aran Sei

மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – நடிகர் சோனு சூட்

நாடும் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கோரியுள்ளார்.

மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள், வரும் மே 4 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால், தேர்வுகளை இணையவழியாக நடத்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி

இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 11) சோனு சூட் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், “கொரோனா தொற்று எண்ணிக்கையானது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 45 ஆயிரமாக உள்ள நிலையில்,பொதுதேர்வுக்கு அக மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம் என்று நான் கருதுகிறேன். அப்படியில்லாது போனால், இது பலரின் வாழ்கையை ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும்.” என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன் #cancelboardexam2021 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்