Aran Sei

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் – அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட சோனியா காந்தி கோரிக்கை

Image Credit : indianexpress.com

ந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையை அரசாங்கம் சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டிய சோனியா காந்தி, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் தொடர் தோல்விகளின் எதிரொலி: காரணங்களை ஆராய கூடுகிறது செயற்குழு

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காணொளி வாயிலாக  கலந்து கொண்ட சோனியா காந்தி, ”மக்கள் மீது பச்சாதாபம் இல்லாத அரசியல் தலைமையால் இந்தியா இன்று முடங்கியுள்ளது. மோடி அரசின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் நாடு மூழ்கி வருகிறது” என பேசியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா இலவச தடுப்பு மருந்து: டெல்லி அரசு திட்டம்

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள அவர், “அரசாங்கத்தின் சொந்த அதிகாரம் பெற்ற குழுக்களையும், கொரோனாவிற்கான தேசிய பணிக்குழுவையும், இரண்டாவது கொரோனா அலை தொடர்பாக பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த அதற்கான திட்டங்களைத் தயார் செய்யவும் வலியுறுத்தியுள்ளார். சுகாதாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவும்,  எதிர்கட்சிகளும் கொரோனாவை எதிர்கொள்ள இந்திய ஒன்றிய அரசின் செயல் திட்டங்கள் குறித்து தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், இதைப் பொருட்படுத்ததாத பிரதமர் மோடி, இந்த ஆண்டின் துவக்கத்தில், கொரோனாவை வென்றுவிட்டதாக பிடிவாதமாக அறிவித்தார். அதனை அவரது கட்சியும் கீழ்படிந்து ஏற்றுக்கொண்டு வாழ்த்தியது.”என குற்றம் சாட்டியுள்ளார்.

“பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை

”நிபுணர்களின் அறிவுறுத்தல்களை புறந்தள்ளியதோடு, ஆக்சிஜன், மருந்துகள், வெண்டிலேட்டர்களின் விநியோகத்தை வலுப்படுத்த மறுத்துவிட்டது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளுக்கான ஆர்டர்களை வழங்கவும் அரசு தவறிவிட்டது. மாறாக மக்களின் நல்வாழ்விற்கு தேவையற்ற அத்தியாவசியமற்ற, ஆடம்பர திட்டங்களுக்கு ஆயிரக்கணக்காண கோடிகளைத் திட்டமிட்டு ஒதுக்கி வருகிறது.”என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்