Aran Sei

ஒரே தடுப்பூசிக்கு 3 விலை எவ்வாறு இருக்க முடியும் – பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய சோனியா காந்தி

Image Credit : indianexpress.com

ஒரே நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசி தொடர்பான புதிய கொள்கைமூலம் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குவதில் இருந்து அரசு விலகி இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிய கைவிட்டு இருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வதே நாட்டின் இலக்காக இருக்க வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

லாபமற்ற விலையில் தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் – ஃபைசர் நிறுவனம் தகவல்

கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனம், 3 விதமான விலை நிர்ணயித்துள்ளது. ஒரு டோஸ் மருந்தின் விலை, மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் மாநில அரசுக்குக் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என முழங்கும் பாஜக ஏன் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவில்லை? – மம்தா பானர்ஜி கேள்வி

ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர், “இது போன்ற தன்னிச்சையான வேறுபாட்டை அனுமதிக்கும் முடிவு நியாயமானது இல்லை. தற்போதைய சூழ்நிலையில், துயரங்களில் இருக்கும் மக்களிடம், லாபத்தை சம்பாதிக்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்.” என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்