Aran Sei

‘மிகுந்த ஏமாற்றமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கிறது’ – காங்கிரஸின் செயற்பாடு குறித்து சோனியா காந்தி கருத்து

ண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் அமைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு விரைவில் கூடி இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து, இன்று (மே 7), இணையவழியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “துர்வாய்ப்பாக, அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலும் எதிர்பார்க்காத வகையிலும் அமைந்திருக்கிறது. ஆனால் ஒரு கட்சியாக, இத்தகைய பின்னடைவிலிருந்து பொருத்தமான படிப்பினைகளை நாம் அடக்கத்துடன் கற்றுக்கொள் வேண்டும் என்பதை இந்த தோல்விகள் நமக்கு சொல்லாமல் செல்கிறது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்டபேரவைத் தேர்தலில் வெற்றப்பெற்ற ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க  சட்டபேரவைத் தேர்தலில் வெற்றப்பெற்ற மம்தா பானர்ஜி ஆகியோருக்கு வாழ்த்துகளை சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில், தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டபேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் ஆட்சியை கைபற்றியுள்ள திமுக கூட்டணியின் சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.

‘மம்தாவை ஏன் ஜான்சி ராணி என அழைக்க வேண்டும்’ – விளக்கம் அளிக்கும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்

மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து களமிரங்கிய காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாமல் போனது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டபேரவையில், 41 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ், ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்து, எதிர்கட்சியாகவே தொடரவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய கட்சியுடன் கூட்டணி – காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள ஆனந்த் சர்மா

அசாம் மாநில சட்டபேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க, 75 தொகுதிகள் வேண்டுமென்ற நிலையில், 50 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்ற, பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியானது என்ஆர்காங்கிரஸ்-பாஜக கூட்டணியிடம் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்