Aran Sei

‘தோல்வியிலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் கட்சினருக்கு சோனியா அறிவுரை

ட்டப்பேரவை தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட மோசமான பின்னடைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதில் இருந்து சரியான படிப்பினைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் ஆட்சியை கைபற்றியுள்ள திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து களமிரங்கிய காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

‘தேர்தல் ஆணையம் உதவவில்லை என்றால், பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்காது’ – மம்தா பானர்ஜி

140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டபேரவையில், 41 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அசாம் மாநில சட்டபேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, 75 தொகுதிகள் வேண்டுமென்ற நிலையில், 50 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து பாஜக கூட்டணி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

புதுச்சேரியில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, என்ஆர்காங்கிரஸ்-பாஜக கூட்டணியிடம் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது.

‘எதிர்கட்சிகளின் மகா கூட்டணியின் ஆன்மா காங்கிரஸ்; ஆனால் தலைமையை ஆலோசித்தே முடிவெடுப்போம்’ – சிவசேனா

இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களிலும், கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி, பீகார் சட்டபேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியிருந்தது.

இந்நிலையில், இம்மாதம் 7 ஆம் தேதி, இணையவழியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட குழுவான, காங்கிரஸ் செயற்குழு கூடி ஆராயும் என்று அறிவித்திருந்தார்.

‘மிகுந்த ஏமாற்றமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கிறது’ – காங்கிரஸின் செயற்பாடு குறித்து சோனியா காந்தி கருத்து

இந்நிலையில், இன்று (மே 10), கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நம்முடைய மோசமான இந்த பின்னடைவை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற தலைகீழான மாற்றங்கள் கட்சியில் ஏற்படுத்தும் ஒவ்வொரு தாக்கத்தையும் கவனித்து, அறிக்கை சமர்பிக்க ஒரு சிறிய குழுவை அமைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“கேரளாவிலும் அசாமிலும் ஆளுங்கட்சியாக இருந்த நாம் ஏன் இப்போது அதை இழந்து நிற்கிறோம். மேற்கு வங்கத்தில் ஏன் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியவில்லை. இவற்றை எல்லாம் கட்சி நேர்மையாக புரிந்து கொள்ள வேண்டும். இவை கசப்பான பாடங்களையே நமக்கு தரும் என்றாலும், நாம் யதார்த்தத்தையும் உண்மையையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லாது போனால், சரியான படிப்பினைகளை நம்மால் கற்ற முடியாது போகும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கும்பமேளா – ஹரித்துவாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நாட்களில் 1800% அதிகரிப்பு

தற்போதைய கொரோனா பரவல் குறித்து பேசுகையில், “நாட்டின் நிலைமை பேரழிவை நோக்கி செல்கிறது. அரசின் தோல்விகள் அப்பட்டமாக தெரிகின்றன. விஞ்ஞான ஆலோசனைகளை வேண்டுமென்றே புறக்கணித்து, கொரோனா பெருந்தொற்றை மோடி அரசாங்கம் கவனக் குறைவாக கையாண்டதால், ஒரு பெரிய விலையை நம் நாடு கொடுத்துக்கொண்டிருக்கிறது. உண்மையில், கொரோனா சூப்பர்-ஸ்ப்ரெட்டர் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதற்கு காரணம், அதனால் கிடைக்கும் அரசியல் ஆதாயங்களுக்கு மட்டும்தான்” என்று சோனியா காந்தி அக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்