கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
வயதிற்கு பதிலாக தேவையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க உதவிய கருவிகள், உபகரணங்கள், மருந்துகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துல்லார்.
தடுப்பூசிகள் முதன்மையான நம்பிக்கை என்று கூறியுள்ள சோனியா, ”துரதிரஷ்டவசமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட 3 முதல் 5 நாட்கள்வரை மட்டுமே தடுப்பூசி கையிருப்பு வைத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
”உள்நாட்டு உற்பத்தி திறனைக் கணிசமாக அதிகரிப்பது ஒரு புறம் அவசியமாக இருந்தாலும், முறையான அனுமதி பெற்று தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை அனுமதிப்பதே விவேகமாக இருக்கும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்கும் இனப்படுகொலைக்கும் அறைகூவல் விடுத்த நரசிங்கானந்த் – ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை?
ஒரு மாநிலத்திற்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை என்பது, அம்மாநிலத்தின் கொரோனா பரவலின் நிலை மற்றும் முன்கணிப்பை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என சோனியா காந்தி அக்கடிதத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.