Aran Sei

சுடுகாட்டுப் பாதை மறுப்பு – எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாயத்து அலுவலக வாசலில் சடலத்தை எரித்த தலித்துகள்

மும்பை மாநிலம் சோலாப்பூர் பகுதியில் உள்ள மலேவாடி கிராமத்தில் இறந்த  ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்த முதியவரின் உடலை  ஆதிக்கச்சாதியினரின் வயல் வழியே எடுத்துச்செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதிக்க சாதியினருக்கு எதிராக போராடியும் முதியவரின் உடலை எரிக்க அனுமதிக்காத நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அவரது உடலை எரித்துள்ளனர்.

அந்தக்கிராமத்தில் ஏறத்தாழ  1,100 வீடுகள் உள்ளன. அதில் இரண்டு வீடுகள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவர்களுடையது.

மேலும், கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை நடந்த சாதி ரீதியிலான மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியை சேர்ந்த சுமன், “இறந்த முதியவரின் சகோதரரான எங்கள் மாமா, பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இப்பிரச்சினை தொடங்கியது. அவர் ஆதிக்கச் சாதியினருக்கு அடங்கியவராக இருப்பார் என்று நினைத்தனர். ஆனால், அவர் அவ்வாறு இல்லாத நிலையில், அது கிராமத்திற்குப் பிறச்சினையாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிலிருந்து ஆதிக்கசாதியினரின் வயல்வெளி வழியாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதியவரின் உடலை எரிக்க  விடாத இந்தச் சம்பவம்குறித்து , அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில்  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும், காவல்துறை 13 பேரின் மீது வழக்குப்பதிந்துள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித நடவடிகையயும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதியை சேர்ந்த சுமன் சுட்டிகாட்டியுள்ளார்.

source:தி வயர்

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்