Aran Sei

ஜனநாயகத்தை மதிக்காத கூகுள் நிறுவனம் – ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள்

மெரிக்காவில், செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்த டிம்னிட் கெப்ரூ பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த  பொறியியல் துறை இயக்குநரும் (டேவிட் பேக்கர்), மென்பொருள் பொறியாளரும் (வினேஷ் கண்ணன்)  ராஜினமா செய்துள்ளனர்.

கூகுள் நிறுவனம் பன்முகத்தன்மைக்கும், நெறிமுறைகளுக்கும் மதிப்பளிதில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

எதியோப்பியாவைச் சேர்ந்த டிம்னிட் கெப்ரூ, கூகுல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் (Ethics) பிரிவின் இணை தலைவராகப் பணியாற்றி வந்தார். கூகுலின் “பேசும் தொழிற்நுட்பம் (Speech Technology) புறக்கணிக்கப்பட்டிருக்கும் சமூகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” எனும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்தார்.

அந்த ஆய்வறிக்கை கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியடுதையடுத்து, கெப்ரூ கடந்த டிசம்பர் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்

இந்நிலையில், பயனர் பாதுகாப்பின் இயக்குநராகவும்,  கடந்த 16 ஆண்டுகளாகக் கூகுல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவருமான டேவிட் பேக்கர், கெப்ரூவின் வெளியேற்றம், கூகுல் நிறுவனத்தின் ஊழியராகப் பணிபுரியும் தனது ஆசையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?

மேலும், ”இந்த நிறுவனத்தின் நான்கு சுவர்களுக்குள் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளைப் புறக்கணித்து விட்டு, நாங்கள் பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கிறோம் எனக் கூறக் கூடாது” எனக் கூறி, கூகுள் நிறுவனத்திலிருந்து, டேவிட் பேக்கர் ராஜினாமா செய்துள்ளார்.

கமலா ஹாரிஸ் கறுப்பின மக்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்கள் – காலோன்டா முலாம்பா

கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளாரான வினேஷ் கண்ணன்,  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கெப்ரூவையும், கெர்லியையும் (பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றொருவர்) தவறாக நடத்திய கூகுள் நிறுவனத்திலிருந்து தான் வெளியேறி விட்டதாகவும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் இருவரும் ”கறுப்பினத்தவர்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

கூகுள் நிறுவனத்தில் நிர்வாக மாற்றத்தைக் கோரி, பல ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடந்த மாதம் தொடங்கப்பட்ட கூகுள் தொழிற்சங்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாகவும், கெப்ரூவின் வெளியேற்றத்தை கண்டித்து கூகுளில் பணிபுரியும் 1,35,000 ஊழியர்களில் 2,600 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

கெப்ரூவின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Source: Reuters 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்