Aran Sei

மோடிக்கு எதிராக ட்வீட் – கைது செய்யப்பட்ட இளைஞர்

Image credit : thehindu.com

ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்டவரை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வீடியோவை பகிர்ந்ததாக உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தை சேர்ந்த சலீம் கான் (31 வயது) என்பவரை, நேற்று (நவம்பர் 15) உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிய மோடி: டைம்ஸ் பத்திரிகை

நேற்று முன் தினம் (நவம்பர் 14) சலீம் கான் மீது புலந்த்ஷர் வட்ட சைபர் செல்லுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட சலீம் கான் கோட்வாலி தேஹாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

“குற்றம் சாட்டப்பட்ட சலீம் கான் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய அந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட  வேண்டும் என்று பலர் உள்ளூர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர்.” என்று கோட்வாலி காவலர் தேஹத் நரேந்திர குமார் சர்மா பிடிஐ-யிடம் கூறியுள்ளார்.

மோடியின் இந்தியாவில் முசோலினியின் இத்தாலியை வாசிப்பது : ராமச்சந்திர குஹா

 

குற்றம் சாட்டப்பட்ட சலீம் கான், அதே ஊரை சேர்ந்தவர் என்றும் படித்தவர் என்றும் ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவரது என்ன தொழில் செய்கிறார் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சலீம் கான் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கோட்வாலி காவலர் நரேந்திர குமார்  ஷர்மா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்