Aran Sei

சிறப்புத் தகுதியை இழக்கிறார் டிரம்ப் – பதிவுகளை அகற்ற டிவிட்டர் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது முன்னாள் அதிபர் டிரம்ப் எழுதிய தவறான டிவிட்களைக்  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும்  தவறான ட்வீட்டுகளை அவர் வெளியிட்டபோது எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலம்  ஜனவரி 20 ஆம் தேதி முடிவடையும் நிலையில், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  பதவியேற்க உள்ளார் . ட்விட்டரின் விதிகள் புதிய அதிபருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்  விதிமுறைகளை மீறி ட்விட்டரில் பதிவிட்டால், பொது நோக்கத்திற்காக அந்த ட்விட்டுகள் நீக்கப்படும் என்பது டிவிட்டர் விதிகளில் ஒன்று.

இந்தக் கட்டுப்பாடு அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமே பொருந்தும். சராசரி குடிமக்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. எனவே முன்னாள் அதிபர்  டிரம்ப்புக்கும் சாதாரண மக்களுக்கான விதியே பொருந்தும் என்று டிவிட்டரின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மோசடி குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்பின்  டிவிட்டர்  கணக்கிற்குப்  பலமுறை எச்சரிக்கை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் விதமாகப் பதிவிட்ட ட்ரம்பின் டிவிட்டை பொதுநலன் கருதி நீக்கி யுள்ளாதாக டிவிட்டர்  தெரிவித்துள்ளது.

பேஸ்புக் கொள்கைகளின் கீழ், ஜனவரி மாதம் பைடன் பதவி ஏற்ற பிறகு, டிரம்பின் பதிவுகள் மதிப்பீட்டுக் குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட மாட்டாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசின் தலைவர், அரசின் முக்கிய அதிகாரிகள், அரசின் அமைச்சர்கள் போன்றோருக்குப் பேஸ்புக்கின் இணைய கொள்கையின்படி (online policy) தகவலின் உண்மைத்தன்மையைச் சரி பார்ப்பதிலிருந்து  விலக்களிக்கப்பட்டுள்ளது.

அரசின் முன்னாள் அதிகாரிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் உண்மைச் சரிபார்ப்பு கண்காணிப்புக் குழுவின் கீழ் தொடந்து வருவார்கள்.

டிரம்பின் கணக்கை எவ்வாறு நடத்தும் என்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு பேஸ்புக் பதிலளிக்கவில்லை.

அமெரிக்க அதிபாராக தேர்வாவதற்கு தேவையான 270 தேர்வுக் குழு வாக்குளை கடந்த சனிக்கிழமையன்று ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜே பைடன் பெற்றார். குடியரசுக் கட்சியின் வேட்பாளர்  டிரம்ப் இந்த வெற்றியை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து முறையிடப்போவதாகவும்  கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்