இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான ட்விட்டரின் பொது கொள்கை இயக்குனர் மஹிமா கவுல், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தாரென அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
ராஜினாமா செய்திருந்தாலும், மார்ச் மாதம்வரை பதவியில் தொடர்வாரென அந்த அதிகாரி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பொது கொள்கை பிரிவு துணைத் தலைவர், மோனிக் மெக்கே, தனது அறிக்கையில், “ஒரு நல்ல இடைவெளியை எடுக்கும் விதமாக, இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான ட்விட்டரின் பொது நிதிக்கொள்கை இயக்குனராக இருக்கும் மஹிமா கவுல், இந்த் ஆண்டின் தொடக்கத்தில், அவரது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது ட்விட்டருக்கு ஒரு இழப்புதான் என்றாலும், ஐந்தாண்டுகளாகப் பணியாற்றி வரும் கவுலின் முடிவான வாழ்க்கையில் முக்கியாமான நபர்கள் மற்றும் உறவுகளில் கவனம் செலுத்தும் அவரது வருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம். மார்ச் மாதம்வரை கவுல் தனது பதிவியில் தொடர்வார்” எனக் கூறியிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக விற்பனை, அதிகபட்ச விலை, அதிர்ச்சிகள், இழுத்து மூடல் – தனியார் மய துறைச் செயலர்
அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் மூன்றாவது சந்தையாக இந்தியா இருப்பதாகவும், முன்னணி நடிகர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அரசியல்வாதிகள் உட்பட கோடிக்கணக்கானவர்கள் ட்விட்டரை பயன்படுத்தி வருவதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆட்சேபத்திற்குரிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட் செய்த 250 கணக்குகளை ”ஒரு தலைப்பட்சமாக” தடைசெய்ததற்காகக் கடந்த வாரம் மத்திய அரசு, கடுமையான கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியதாக என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் எழுச்சிப் போராட்ட அறிக்கை – வடகிழக்கு தமிழர், முஸ்லீம்கள், மலையக தமிழர் உரிமைகள் வலியுறுத்தல்
”போலியான, அச்சுறுத்தும், ஆத்திரமூட்டும் ட்வீட்கள்” ட்வீட் அல்லது மறு ட்வீட் செய்யப்பட்டு வருவதாகவும், ”இந்திய அரசு பிறப்பித்த உத்தரவைக் கடைபிடிக்கவோ அல்லது கீழ்படியவோ” ட்விட்டர் நிறுவனம் மறுத்துவிட்டதாகவும், மத்திய அரசு தனது கடிதத்தில் குறிபிட்டப்பட்டிருப்பதாக அதில் தெரிவித்துள்ளது.
”ட்விட்டர் ஒரு இடைத்தரகு நிறுவனம், எனவே அது பொது அமைதியை பாதிக்கும் அல்லது அவற்றை ஊக்குவிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்பக் கீழ்படிதல் அவசியம். மேலும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு அதிகாரியாகச் செயல்படுவதை அனுமதிக்க முடியாது” என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.