Aran Sei

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

ங்களுடைய மதிப்பீடுகளை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல், மற்றவர்களுக்கு பிரச்சாரம் தொடர்பான பாடம் எடுக்காதீர்கள் என்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு எதிரான விமர்சனங்களுக்கு நடிகை தாப்சி பன்னு பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியை பகிர்ந்து, அது பற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

 

விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் – கிரேட்டா துன்பெர்க் ஆதரவு, ரிஹான்னாவுக்கு கங்கனா பதில்

ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகை கங்கனா ரனாவத், “அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள்.” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையை பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதே கருத்தில், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்‌ஷய் குமார், பாடகர் லதா மகேஷ்கர் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளனர்.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

இந்நிலையில், இதுகுறித்து நடிகை தாப்சி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால்,  நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்