பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் காரணம் அவர்கள் வேலைக்குச் செல்வதுதான் என்று நடிகர் முகேஷ் கன்னா தெரிவித்துள்ளார். இவரின் கருத்திற்குப் பொதுமக்களிடையே கண்டனங்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. நடிகர் முகேஷ் கன்னா சக்திமான், மகாபாரதம் போன்ற தொடர்களில் நடித்தவராவார்.
சமீபத்தில், நடிகர் முகேஷ் கன்னா பில்மி சக்ரா என்ற சினிமாச் செய்திகள் தொடர்பான இணையதளத்துக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதன் ஒரு பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக்கொள்வதுதான். ’மீ டூ’ (பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அம்பலப்படுத்தும் சமூக வலைத்தள இயக்கம்) பிரச்சனை எழுவதற்குக் காரணம், அவர்கள் வேலைக்குச் செல்வதுதான். ஆனால் இன்று பெண்கள், தாங்கள் ஆண்களுக்குச் சமமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக “ஹிந்துத்துவா கண்காணிப்பு” என்ற அமைப்பு ட்வீட் செய்துள்ளது.
Actor turned right wing rabble rouser Mukesh Khanna says women going out to work and thinking of being equal to men is cause of #metoo pic.twitter.com/1sZ37GudTy
— Hindutva Watch (@Hindutva__watch) October 30, 2020
மேலும், “பெண்களின் சுதந்திரம் பற்றிப் பலர் பேசுகிறார்கள். அங்குதான் பிரச்சனையே தொடங்குகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைதான். வீட்டில் தன்னைப் பார்த்துக்கொள்ள அம்மா இல்லாமல் குழந்தை கஷ்டப்படுகிறது. பெண்கள் தன் மாமியாரோடு சேர்ந்துகொண்டு, எல்லா நாளும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் செய்வதை எப்போது நாங்களும் செய்ய முடியும் என்று பெண்கள் பேசத் தொடங்கினார்களோ அப்போது ஆரம்பித்தது இந்தப் பிரச்சனை. ஏனென்றால், ஆண் ஆண்தான்; பெண் பெண்தான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நவீன உலகில் தான் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் கன்னாவின் இந்தப் பேச்சு, சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
பிரபல ’ஸ்டாண்ட் அப் காமெடி’யனான சஹீல் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சக்திமானின் மிகப்பெரிய பலவீனமே அவரின் மனநிலைதான் என்று தெரியாமல் போனதே” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Didn't know that Shaktiman's biggest weakness was his mindset. https://t.co/zQ1tcPMVZl
— Sahil Shah ?? (@SahilBulla) October 30, 2020
ஊடகவியலாளரான ஆண்ட்ரு போர்கேஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் ஹீரோவாக இறந்து விட வேண்டும் இல்லை என்றால் நீங்கள் வில்லனாக மாறும் வரையில் வாழ்ந்து விடுவீர்கள்.” என்று கருத்து கூறியுள்ளார்.
“You either die a hero or see yourself live long enough to become the villain” https://t.co/MIMNaaybDs
— Andre Borges (@borges) October 30, 2020
பேஜ் என்பவர், “என் குழந்தைப் பருவத்தில் சக்திமான் தொடரைப் பார்த்து, எவ்வளவு மதிப்புள்ள நேரத்தை வீணடித்துள்ளேன் என்பதை இப்போது உணரும் போது வலிக்கிறது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Painfully realising the fact that many precious time from my childhood went wasted on watching sakthiman aerial ??♂️? https://t.co/D3bzNsjx8s
— Bej ✋ (@bej_2019) October 30, 2020
இதற்கு முன்பே நடிகர் முகேஷ் கன்னா, ”இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும், அது நம்மைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது.” என்றும், ”இந்தியாவில் இந்துக்கள் தான் வாழ வேண்டும், மற்ற மதத்தினர் எல்லோரும் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே.” என்றும் கூறி, விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.