Aran Sei

பேரறிவாளன் விடுதலைக்காக ’மிஸ்டு கால்’ இயக்கம் – தலைவர்கள், நடிகர்கள் அழைப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான குரல்கள் ஒலிக்கின்றன.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜனவரி 10) தொலைபேசி அழைப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனின் விடுதலை வழக்கு இறுதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நிலைப்பாடு அவரது விடுதலை தொடர்பான முடிவில் பெரும் பங்கு வகிக்கும்.

பேரறிவாளனை விடுதலை செய்யும்படி தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 2018-ம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து இயக்கம், போராட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி  உள்ளிட்ட போராட்டத்தின் பல வழிமுறைகளை, எழுவரின் விடுதலைக்காகத் தமிழகம் முழுவதும் செய்து வருகின்றனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – கோரிக்கையை முன்னிறுத்தி உண்ணாவிரதம்

 

இந்தப் பின்னணியில் ’பேரறிவாளன் விடுதலை’ தற்போது பேசுபொருளாக இருக்கும் வகையில், தொலைபேசி வழி பரப்புரை செய்யுமாறு மக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலை: ’பொய் சொன்னது வழக்கறிஞரா இல்லை தமிழக அரசா’ – திருமாவளவன் கேள்வி

இதனை இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராம்,தியாகராஜா குமாரராஜா, பொன்வண்ணன், ராஜு முருகன், கார்த்திக் சுப்புராஜ், நவீன் , நடிகர்கள் கலையரசன், ரோகிணி, ரித்விகா உள்ளிட்ட பலர் துவக்கி வைத்துள்ளனர்..

அவர்கள் 90 99 52 66 33 என்ற எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு கொடுத்து பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “பேரன்பு மனிதநேய உள்ளங்களே! அறிவின் விடுதலையை விரைவுபடுத்த “90 995 266 33” என்ற எண்ணுக்கு அழைப்பு அனுப்பி ஆதரவு தாருங்கள். உங்களின் 30 வினாடி நேரம் 30 ஆண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா.இரஞ்சி, தனது ட்விட்டர் பக்கத்தில், ரிலீஸ் பேரறிவாளன் என்ற ஹேஷ் டாக்கை இட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த எண்ணுக்கு தவறும் அழைப்புத் தருவோம். #பேரறிவாளனை_விடுவிக்க அழுத்தம் கொடுப்போம். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் மெத்தனம் காட்டும் ஆட்சியாளர்களைச் செயல்படவைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைக்காக (ஏழுவர்) காத்துக்கிடக்குது தமிழ்நாடு.” என்று தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், “பேரறிவாளனை விடுவிக்க ஓங்கி குரல் எழுப்புவோம்.” என்று கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் ட்விட்டரில், “தாமதிக்கப்படும் நீதியை விரைவுபடுத்த, ஜனநாயகத்தை உறுதிப்படுத்த, இணைந்து பங்களிப்போம் தோழர்களே..!” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகை ரித்விகா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போன்றோரும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்