Aran Sei

‘யாரை எல்லாம் கைது செய்வீர்கள், எடப்பாடி?’ – நெல்லை கண்ணன்

மிழினத்தின் பெருமை மிகு இராமநாதபுரம் சேதுபதி மன்னரே விவேகானந்தரை அமெரிக்க சமயங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்பினார்.

அது கணியன் பூங்குன்றன் பிறந்த மாவட்டம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று , உலகிற்கு அறிவித்த மாமனிதன்.

அந்த மண்ணிலிருந்து போனதனாலேயே அவர் சகோதர சகோதரிகளே என்று சிகாகோவிலே உரையைத் துவங்கினார்

அவரைத் துறவியாக பிராமணர்கள் ஏற்கவில்லை.
ஒரு சத்திரியன் எப்படி துறவியாக முடியும் என்றனர்..
துறவியாகும் தகுதி என்றால் பிராமணர்களுக்கு மட்டும் தான் உண்டு என்றனர்
அவரைத் துறவியாக அறிவித்தவர் மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் பிராமணர்

எடப்பாடியாரிடம் கூறி அவர் மீதும் ஒரு வழக்குபதியுங்கள்

https://www.facebook.com/thamizhkadalnellaikannan/posts/1801700983339281

பிராமணர்கள் மட்டுமே உருவ வழிபாட்டிற்கான கோயில்களை உருவாக்க முடியும் என்ற நேரம், எங்கள் கோயில்களை நாங்களே உருவாக்கிக் கொள்கின்றோம் என்று உலகம்முழுவதும் கோயில்களை உருவாக்கினாரே நாராயணகுரு,

எடப்பாடியாரிடம் சொல்லி அவர் மீதும் ஒரு வழக்கு பதியச் சொல்லுங்கள்

தோளிலே துண்டு அணியக் கூடாது என்ற அடக்குமுறையை எதிர்த்துப் போராடினாரே அய்யா வைகுண்டபதி கண்ட பெரியவர்

அவர் மீது வழக்கு பதிவீர்களா!

*****

சிலர் பாரதியை பிராமணர் என்கின்றனர் , அவர் உயிரோடு இருந்த போது அவருக்கு பல இன்னல்களைத் தந்தவர்கள்

அவன் எழுதினான் அந்த மகா கவி மக்கள் கவி

சூத்திரற்கொரு நீதி தண்டச் சோறுண்ணும்
பார்ப்புக்கு மற்றொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது
சாத்திரம் அல்ல சதியென்று கண்டீர்

என்கின்றான்

பேராசைகாரனடா பார்ப்பான் அவன்
பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான் என்கின்றா

எடப்பாடியாரிடம் சொல்லி அவன்மீதும் ஒரு வழக்கு பதியச் சொல்லி உள்ளே தள்ளுங்கள்

https://www.facebook.com/224762401033155/posts/1801693850006661/

****

வான்மீகி மாமுனியின் இராமகாதையை தமிழாக்கினானே கவிச்சக்காரவர்த்தி கம்பன்.

அவன் கிஷ்கிந்தா படலத்தில் வாலி என்னும் அந்த மாவீரனை மறைந்து இருந்து அம்பெய்தி கொல்ல இராம பிரான் முற்பட்டு அவ்ருடைய அம்பை தன் கரங்களாலும் வாலாலும் தடுத்து நிறுத்தி விட்ட வாலி அருகினிலே சென்று அயோத்தி மன்னர் மகன் இராமர் நிற்கும் போது வாலி வினாக்களைத் தொடுப்பான்.

முதல் செய்யுளில் வினவுவான் வாலி

ஏனெனில் கிஷ்கிந்தையில் இராமனைக் கடவுளாகத் தொழுது மனைவியைக் கூட இராமரைக் குறை கூற அனுமதிக்காத வாலி அவன் ஒருவனுக்கே கிஷ்கிந்தையில் இராம பிரானைத் தெரியும்.

அனுமனுக்கு தெரியாது சுக்ரீவனுக்கு தெரியாது.

அவனால் நம்ப இயலவில்லை அறங்களின் நாயகனான இராம பிரானா நம்மை மறைந்திருந்து அம்பெய்தி கொல்ல முயற்சித்தான் என்று மனைவி தாரை சொன்னது உண்மையாகிப் போனதே என்று
முதற் செய்யுள்

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு
மற்றோர் குரக்கினத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் எம்பால் எப்பிழை கண்டாயப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பழிக்கற்பாலர்

என்கின்றான் கம்பன்

சமஸ்கிருதத்தை முறையாகக் கற்றிருந்த கம்பன் இர்ண்டாவது வரியிலே அரச நீதி வேறாயிற்றே எம்பிரானே ஒரு வேளை மனு நெறி இப்படி யாரோ ஒரு அரக்கன் மனைவியைத் தூக்கிப் போக சம்பந்தம் இல்லாத குரங்குகள் அரசைக் கொல் என்று கூறிற்றோ என்கின்றான்

அந்தச் செய்யுள் இராமபிரான்மீது வாலி வைத்திருந்த பக்தியைக் காட்டும். இப்படி ஒரு செயலை நீ செய்ததனால் அனாதையாகிப் போன புகழ் எல்லாம் வேறு யாரிடம் போய் அடைக்கலம் கேட்க இயலும் அய்யனே என்கின்றான்.

சக்கரவர்த்தித் திருமகன் எழுதிய இராஜாஜி அவர்களும் வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது குற்றமென்றே எனக்கு படுகின்றது என எழுதினார்

அப்படியெனில் சமஸ்கிருதத்தை பழுதறக் கற்ற கம்பன்காலத்திலேயே மனு நீதி இருந்திருக்கின்றது

எடப்படியாரிடம் சொல்லுங்கள் கம்பரைக் கைது செய்யச் சொல்லி

– நெல்லை கண்ணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்