கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஒடியதாக நடிகர் மிலிந்த் சோமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தன்னுடைய 55 வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் மற்றும் மாடலான மிலிந்த் சோமன், கடற்கரையில் நிர்வாணமாக ஒடிய புகைபடத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைபடத்தை எடுத்தது தன்னுடைய மனைவி அங்கிதா கன்வார் எனவும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைராலனது. இதையடுத்து கோவா சுரக்ஷா மன்ச் (ஜிஎஸ்எம்) எனும் இந்துத்துவ அமைப்பு, பொதுவெளியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக மிலிந்த் சோமன் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளது. இந்த புகாரில் மிலிந்த சோமன் எடுத்த புகைப்படம் பொது மக்களுக்கு கோவாவைப் பற்றிய தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஜிஎஸ்எம் இன் தலைவர் சமீர் ”மிலிந்த் சோமன் கோவாவை தன்னுடைய மலிவான விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
”மக்கள் அடிக்கடி வந்துப் போகும் ஒரு பொது இடத்தில் இப்படி நிர்வாணமாக ஒடுவது முட்டாள் தனமான நடவடிக்கை” என அவர் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்எம் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டது) பிரிவு 67 (ஆபாசமான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.
இதற்கு முன்பு கோவாவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ஆபாசப் புகைபடம் எடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய நடிகை பூணம் பாண்டே காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடிகை மற்றும் மாடலான பூணம் பாண்டே கோவா மாநிலம் கனகோனா பகுதியில் இருக்கும் சபோலி அணையில் கவர்ச்சியான ஃப்போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இது போன்ற ஒரு ஃப்போட்டோஷூட்டிற்கு அனுமதி அளித்த காவல் துறைக்கு எதிராகவும், பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதாக பூணம் பாண்டேவிற்கு எதிராகவும் கோவா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், இந்த போட்டோஷூட்டிற்கு அனுமதியளித்த காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், பூணம் பாண்டேவும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
#PoonamPandey & #MilindSoman both stripped down to their birthday suits in #Goa recently. Pandey partly, Soman completely. Pandey is in legal trouble–for obscenity. Soman is being lauded for his fit body at age 55. I guess we are kinder to our nude men than to our nude women. 🤔 pic.twitter.com/qQ9UFQIYXJ
— Apurva (@Apurvasrani) November 4, 2020
மிலிந்த் சோமனின் புகைப்படமும் பூணம் பாண்டேவின் புகைப்படமும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆபாசமான புகைபடத்திற்காக பூணம் பாண்டே கடுமையான எதிர்ப்பை சந்தித்தபொழுது, மிலிந்த் சோமனுக்கு பெரியளவிளான எதிர்ப்பு வராமல் இருந்தது ஆண்-பெண் சுதந்திரம் தொடர்பான விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.