Aran Sei

‘சமுக வலைதளத்தைக் கட்டுபடுத்த பாஜகவினர் தயாராக வேண்டும்’ – யோகி ஆதித்யநாத்

மூக வலைத்தளம் கடிவாளமற்ற குதிரையாக இயங்கி வருகிறது. எனவே, அதைக் கட்டுபடுத்தும் வகையில் பாஜகவின் இணையப் பிரிவு செயல்படவேண்டுமென உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மேலும், பெகசிஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில்  குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருக்காமல் பாஜகவினர் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, “அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை யார் கட்டுபடுத்துகிறார்களோ அவர்களை கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்கள் எவர் கட்டுப்பாடின்றியும்  இயங்குகிறது. நீங்கள் விழிப்புடன் சமூகவலைதளங்களை அணுகவில்லை என்றால், நீங்களும்  ஊடக விசாரணையின் தலைப்பாக மாறுவீர்கள், ” என்றும்  ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதன்காரணமாகத் தான்  கடிவாளமற்ற  குதிரையாக இயங்கும் சமூக வலைதளத்தை கட்டுபடுத்துவதற்கான பயிற்சியும், தயாராக வேண்டியதும் பாஜகவினருக்கு முக்கியமாக உள்ளது” என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்