Aran Sei

ஜெர்மனியில் வெற்றி முகத்தில் சமூக ஜனநாயக கட்சி – நான்காம் இடத்திற்கு தள்ளபட்ட வலதுசாரிகள்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் தேசிய தேர்தலில் இடது சாரி சித்தாந்தை பின்பற்றும் சமூக ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வலது சாரி மாற்றாக அறியப்பட்ட சுதந்திர ஜனநாயகக் கட்சி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 ஆம் தேதி காலை நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற 299 தொகுதிகளில், 25.9 விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் சமூக ஜனநாயக கட்சி முதலிடத்திலும், அதிபர் ஏஞ்சலா மெர்கேலின் யூனியன் பிளாக் கட்சி 24.1 விழுக்காடு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

14.8 விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் சுற்றுச்சூழல் ஜனநாயகவாதிகள் மூன்றாம் இடத்திலும், வலது சாரி ஆதரவு சுதந்திர ஜனநாயக கட்சி 11.5% விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர்.

1949 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டென்மார்க் சிறுபான்மையினருக்கான எஸ்எஸ்டபிள்யூ ஒரு இடத்தை வென்றுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source : AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்