Aran Sei

‘சுகாதார உரிமை’ குறித்து சுவரொட்டி ஒட்டிய சமூகசெயற்பாட்டாளர்கள்- மோடிக்கும் ஆதித்யநாத்துக்கும் எதிரானவர்களென தாக்கப்பட்ட அவலம்

த்தரபிரதேச மாநிலம் லக்னோவில் “பொது சுகாதார உரிமை” குறித்து சுவரொட்டி ஒட்டிய சமூக செயற்பாட்டாளர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சுவரொட்டி மற்றும் துண்டறிக்க வழங்கிய செயற்பாட்டாளர்களைக் நகர்புற நக்சல்கள் என்றும் மோடி, ஆதித்யநாத்திற்கு எதிரானவர்கள் என்றும் கூறி தாக்கியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

‘ஊடகங்களிடம் அதிகம் பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்’ : அச்சம் தெரிவிக்கும் பாஜக எம்எல்ஏ

 

நவுஜவான் பாரத் சபா மற்றும் சிறீ முக்தி லீக் என்கிற இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும், ஏழை மக்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்க வேண்டுமெனக்கோரி ‘பொது சுகாதார உரிமை’ என்ற பெயரில் திட்டமொன்றை செயல்படுத்தி வருவதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஹாசன்கஞ் என்ற பகுதியில் ஒரு பெண் உட்பட மூன்று செயற்பாட்டாளர்கள் துண்டறிக்கை விநியோகித்தபோது முஸ்ஸீம் ஆதரவாளர்கள் என்றுக் கூறி சிலர் தடுத்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது மக்களின் விருப்பப்படியே வழங்கப்படுகிறது என்று சமூகசெயற்பாட்டாளர்கள் தெரிவித்த போது நகர்புற நக்சல்கள், மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரானவர்கள் என்றுக்கூறி தாக்கியதாகவும், பெண் செயற்பாட்டாளரை தகாத வார்த்தைகளால் அக்கும்பல் திட்டியதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஊடகங்களிடம் அதிகம் பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்’ : அச்சம் தெரிவிக்கும் பாஜக எம்எல்ஏ

 

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மூன்று செயற்பட்டாளர்களையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று மூன்றுமணி நேரத்திற்கு மேல் விசாரணையில் ஈடுபட்டதாகவும், பின்னர் இடது சாரிகளின் போராட்டத்திறகுப் பின் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தாக்கியக் குற்றவாளிகள் மீது சமூகசெயற்பட்டாளர்கள் அளித்த புகாரும் ஏற்கபடவில்லையென்றும் சமூகசெயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்