Aran Sei

பெகசிஸ் விவகாரம்: என்.எஸ்.ஒ நிறுவனத்தில் ஆய்வு நடத்திய இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை

பெகசிஸ் ஸ்பைவேரை உருவாக்கிய இஸ்ரேலைச் சார்ந்த  என்.எஸ்.ஒ நிறுவனத்தின் அலுவலகத்தில்  அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளதாக   தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர் வழியாகத் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக  உலகளாவிய அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து,  டேல் அவிவ்  பகுதியில் உள்ள என்.எஸ்.ஒ நிறுவனத்தின் அலுவலகத்தில்  அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளதாக  அந்தச் செய்தி  குறிப்பிடுகிறது.

பெகசிஸ் ஸ்பைவேர்: ‘உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்’ – மூத்தப் பத்திரிகையாளர் என்.ராம் பொதுநல மனு

கடந்த ஜூலை 28 அன்று, பாரிஸ் நகரில்  இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்  மக்ரூனை சந்தித்தனர். அப்போது  மக்ரூன்  தொலைபேசி எண் கண்காணிக்கப்பட்டது  தொடர்பாக அவருடன் உரையாடியதாகவும் , அதேவேளையில்  தான்  இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்    தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேரால் பிரான்ஸ் அதிபர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தி – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்

இதுகுறித்து தெரிவித்துள்ள  என்.எஸ்.ஒ நிறுவனத்தின்  அதிகாரிகள், “பெகசிஸ் தொடர்பாக  எழுந்துள்ள புகார்குறித்து  இஸ்ரேல்  தேடுதல்  ஆய்வு நடத்தவில்லை, பார்வையிட மட்டுமே வந்தனர்”  என்று  கூறியுள்ளதாக  அந்தச் செய்தியில்  தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்