Aran Sei

பெகசஸ் ஸ்பைவேர் ஜனநாயகத்தின் மீது விழுந்த தாக்குதல் – பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்

பெகசஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டது தேசத்தின் ஜனநாயகத்தின் மீது விழுந்த அதிர்ச்சியூட்டக்கூடிய தாக்குதல் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகாரளித்த பெண்: பெகசஸ் மென்பொருள் வழியாக கண்காணிப்பு

மேலும், இதுகுறித்து  உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இஸ்ரேலை சார்ந்த பி.எஸ்.ஒ என்ற நிறுவனத்தின் பெகசஸ் ஸ்பைவேர் வழியாக பத்திரிக்கையாளர்கள்,எதிர்க்கட்சி தலைவர், சமுக செயற்பட்டாளர்கள் உட்பட  300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெகசஸ் ஸ்பைவேர் : ‘திருமுருகன் காந்தியின் தொலைபேசியை உளவு பார்ப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்’ – மே 17 இயக்கம்

மேலும், ஒன்றிய அரசு தேச பாதுகாப்பை அப்பட்டமாக அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது என்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்