Aran Sei

மகளிர் ஆணைய நியமனம் : 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி

credits : the indian express

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் இருவர், மத்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்கு தன்னிடம் லஞ்சம் கேட்டதாக சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கை வருகின்ற ஜனவரி 2-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க இருப்பதாக வர்த்திக்கா சிங்கின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

`ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் கொடுக்கப்படும் நாடு இந்தியாதான்’ – ஆய்வு முடிவு

மத்திய அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் சிலர், வர்த்திக்கா சிங்கை மத்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமித்திருப்பது போன்ற போலி கடிதத்தை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்கும் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளனர் என வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழலற்றதா பாஜக அரசு? – மோசடியாக பரப்பப்படும் கருத்து

அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் விஜய் குப்தா மற்றும் ரஞ்சிஷ் சிங் ஆகிய இருவரும், மத்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு பின்னர், அந்தத் தொகையை குறைத்து 25 லட்சம் கேட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஆண் ஒருவர் தன்னுடன் ஆபாசமாக பேசியதாகவும் வர்த்திகா சிங் கூறியுள்ளார்
என என்டிடிவி செய்து வெளியிட்டுள்ளது.

லஞ்சம்: இந்தியாவுக்கு 77-வது இடம்

கடந்த நவம்பர் 23-ம் தேதி விஜய் குப்தா, அமேதி மாவட்டத்தில் உள்ள முசாஃபிர்கானா காவல் நிலையத்தில்  வர்த்திக்கா மீதும் மற்றொரு நபர் மீதும் புகார் அளித்துள்ளனர். விஜய் குப்தா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும், அவரது பெயரை கெடுக்க முயன்றதாகவும் அவர் வர்த்திக்கா சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்