Aran Sei

தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் – ஃபிட்ச் மதிப்பீடு நிறுவனம் எச்சரிக்கை

credits : PTI

கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுத்துக்கொள்வது, பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என ஃபிட்ச் (Fitch Rating) மதிப்பீடு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம் 3,66,161 பேர்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,26,62,575  ஆக  உயர்ந்துள்ளது.

இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால்  2,46,116 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,754  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த நீண்ட காலம் எடுத்து கொள்வது, (இரண்டாவது அலை பரவல் குறைந்தாலும்) அடுத்தடுத்த அலைகளில் மக்கள் மிக எளிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த மே 5 ஆம் தேதி வரை, இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 9.4 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

கடந்த மாதம், ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம், ”கொரோனா இரண்டாவது அலை, இந்தியப் பொருளாதாரம்  மீண்டு வருவதை தாமதப்படுத்தும், ஆனால் சீர்குலைக்காது என கூறியிருந்த நிலையில் தற்போது, கொரோனாவில் இருந்து மீண்டு வர அதிக காலம் எடுத்து கொள்வது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்ககூடும்” என எச்சரித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கெண்டு மார்தட்டிக்கொள்கிறது” – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

”கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகளும் மரணங்களும் அதிகளவில் இருக்கும் சூழலில், கடந்த 2020 ஆம் ஆண்டை விட, இந்த அலையால் பொருளாதாரம் கடும் ஆபத்தை சந்திக்க இருக்கிறது. ஒரு குறுகிய பார்வையுடன் அதிகாரிகள் ஊரடங்கை அறிவித்துள்ளனர்” என்றும் ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்