Aran Sei

மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக 3 நாள் பேரணி – இலங்கை எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு

லங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக கோரும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிக் கொடுக்காமல், தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று (ஏப்ரல் 13) செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய பேரணியை ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

மேற்கு மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையில் இருந்து, ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இப்பேரணியானது ஏப்ரல் 19 ஆம் தேதி நாட்டின் தலைநகர் கொழும்பை சென்றடையவுள்ளது.

‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

“இந்த அரசை பதவியில் இருந்து வெளியேற வலியுறுத்தி, கலைஞர்கள், வழக்கறிஞர்கள், அறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் பல்வேறு யுக்திகளை கையாண்டு, ஆட்சியில் நீடிக்க இந்த அரசு முயல்கிறது” என்று டில்வின் சில்வா விமர்சித்துள்ளார்.

Source: The Hindu

 

“இனவாதம் தான் இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம்”  – திருமுருகன் காந்தி நேர்காணல்

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்