ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தாகவும், படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று (நவம்பர் 18) ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 560 விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத் துறையின் அனுமதி பெற்றுக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்
நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஒன்பது கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, அடிமை மற்றும் கேபா என்ற இரண்டு மீனவர்களுக்குச் சொந்தமான இரண்டு படகுகளைக் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படகில் இருந்த இயேசு ராஜா மற்றும் தேவா என்ற இரண்டு மீனவர்களின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடி வலைகளைக் கடலிலேயே விட்டு விட்டு, மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்
மேலும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் படகில் இருந்த கண்ணாடிகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும், இதேபோல் சுமார் 5 படகுகளில் வலைகள் மற்றும் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் அச்சமின்றி மீன் பிடிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென படகு உரிமையாளர் அடிமை கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த மாதம் 26 தேதி, இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் சுரேஷ் என்ற மீனவர் ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் எற்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படைத் தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதில் நல்லெண்ண அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.
`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, மீதமுள்ள 121 படகுகளையும் அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக மீனவர்களிடையே பெரும் வாழ்வாதார பிரச்சனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.