Aran Sei

‘விவசாயிகளின் உரிமைகள் குறித்த ஐநாவின் விதிகளை மீறும் விவசாய சட்டங்கள்’ – ஐநா மனித உரிமைகள் சபையிடம் புகார்

சிறுகுறு விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைகள் குறித்த ஐநா-வின் விதிமுறைகளை (இந்தியா கையெழுத்திட்ட),  மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் மீறியுள்ளன என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையிடம் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் புகார் தெரிவித்துள்ளார்.

“இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 46 வது அமர்வுக்கு, தர்ஷன் பால் காணொளி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், ரயில் நிலையங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டங்கள் குறித்தும், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள குறிப்பாணையின் நகலையும் அச்சபையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

விவசாய சட்டத்திற்கு எதிராக மார்ச் 26-ல் பாரத் பந்த் – ஒருங்கிணையும் விவசாய சங்கங்கள்

மேலும், டெல்லி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் 110 வது நாளை, தனியார்மயமாக்கல் எதிர்ப்பு நாளாகவும் கார்ப்ரேட் எதிர்ப்பு நாளாகவும் அனுசரிப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அனுப்பிய குறிப்பாணையில், “பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளில் கைகளில் சிக்க வைக்கும் நோக்கில் எடுக்கப்படும் கொள்கை நகர்வுகள் நிறுத்தப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்