மத்திய அரசின் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, மத்திய அரசு தடைகளை அகற்றிவிட்டு பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை, 11 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கடைசியாக, ஜனவரி 22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம். மத்திய அரசு தடைகளை நீக்கிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை திறக்க வேண்டும்.” என்று வலியுறித்தியுள்ளது.
கடந்த மாதம், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “அதேநேரம், முதலில் அவர்கள் மூன்று விவசாய சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை ஏற்கவேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
மறுபுறம், மூன்று விவசாய சட்டங்களை நீக்குவது மட்டுமே ஒரே தீர்வேயன்றி, ஒத்திவைப்பதல்ல என்று போராடும் விவசாயிகள் சங்கங்கள் உறுதியாக, அந்த முன்மொழிவை ஏற்க மறுத்துவிட்டனர்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.