Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

க்கிம்பூர் கெரி வன்முறையை விசாரிக்க உத்தரபிரதேச மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மற்றும் விசாரணை ஆணையத்தை நிராகரித்துள்ள விவசாயிகளின் சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 18 அன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அவ்வறிக்கையில், “ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை அக்டோபர் 11 ஆம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால், அக்டோபர் 18 அன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்போம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வன்முறை விசாரிக்க உத்தரபிரதேச அரசு நியமித்த சிறப்பு விசாரணை குழுவையும்(எஸ்ஐடி) விசாரணை ஆணையத்தையும் நிராகரிக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் நேரடியாக கண்காணிப்பின் கீழ், பக்கச்சார்பற்ற விசாரணையை வேண்டும் என்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா கோரியுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

இந்த வழக்கு தொடர்பாக உள்ள அனைத்து ஆதாரங்களையும் அப்படியே வைத்திருப்பது குறித்து உத்தரபிரதேச காவல்துறையை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதை வரவேற்கிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்