பிப்ரவரி 12 முதல் 23 வரை உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஐந்து மகாபஞ்சாயத்துகளை நடத்தவுள்ளதாக போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நேற்று (பிப்ரவரி 11), சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் செய்தித் தொடர்பாளர் தர்ஷன் பால் சிங், “நாடாளுமன்றத்தில் போராடும் விவசாயிகளை அவமதிக்கும் விதத்தில் பேசிய பிரதமரை சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டிக்கிறது. நாட்டு மக்கள் கோராமலே இந்த நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்று தன் உரையில் கூறிய பிரதமர், இந்த விவசாய சட்டங்களும் அப்படியே விவசாயிகளால் கோரப்படாமல் இயற்றப்பட்டதுதான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் மகாபஞ்சாயத்து – விரிவடையும் விவசாயிகள் போராட்டம்
மேலும், “பிப்ரவரி 12-ம் தேதி உத்தரபிரதேச மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பிலாரியில், பிப்ரவரி 13-ம் ஹரியானாவின் பகதூர்கர் பைபாஸ்ஸில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கநகர், ஹனுமன்கர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் முறையே பிப்ரவரி 18, 19, 23 ஆகிய தேதிகளில் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்படவுள்ளன. விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள் தொடர்ந்து நடைபெறும்.” என்று உறுதியளித்துள்ளார்.
இதுவரை, உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகர், சஹரன்பூர், சர்கி தாத்ரி போன்ற இடங்களிலும் ஹரியானாவிலும் மகாபஞ்சாயத்துகள் நடந்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.