Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: ஒன்றிய அரசின் இணையமைச்சரை கைது செய்யக் கோரி அக்டோபர் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் 11 மாத நிறைவு மற்றும் லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய அரசின் இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கி, கைது செய்யக் கோரி, அக்.26 ஆம் தேதி நாடு தழுவிய அளவிலான போராட்டத்திற்கு சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை தர்ணா மற்றும் பேரணிகள் நடைபெறும் என சம்யுக்ட் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

போராட்டம் காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த மகாபஞ்சாயத்தை நவம்பர் 22 ஆம் தேதிக்கு மாற்றி இருப்பதாக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அமைப்பு கூறியுள்ளது.

Source : The New Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்