Aran Sei

இஸ்லாமியர்களாக இருக்கும் வரை, பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை

Image Credits: US News

சில நாட்களுக்கு முன் பிரான்சின் நைஸ் நகரில், கத்தியைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனை “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என்று அழைத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இதை நாம் முன்னரே பார்த்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய தசாப்தங்களில் பிரான்ஸ் மக்கள் பல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளனர். இது ஐஎஸ்ஐஎஸ்ஸின் எழுச்சியுடன் தொடர்புடைய மோசமான வன்முறை மட்டுமல்ல, 1961-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஸ்ட்ராஸ்பேர்க்-பாரிஸ் ரயில் குண்டுவெடிப்பு தாக்குதலின் (28 பேர் கொல்லப்பட்டனர்) நிழ்ச்சியாகும்.

2014-ல், ஐஎஸ்ஐஎஸ்ஸின் எழுச்சியால், பிரான்ஸ், ஒரு வித்தியாசமான பயங்கரவாத தாக்குதலின் தொடக்கத்தைக் கண்டது. 2015-ம் ஆண்டு, ஜனவரி மாதம் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்திலும், கோஷர் சந்தையிலும், அதே ஆண்டு, நவம்பர் மாதம் படாக்லான் திரைஅரங்கிலும் நடைபெற்ற தாக்குதல்களில்  வித்யாசமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

சிலவற்றை கணக்கில் கொள்ளும் பொது, நைஸில் தனி நபரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதல், அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதே போல், 2016-ம் ஆண்டு, ஜூன் 14 அன்று, சாலையில் பிரான்ஸ் தேசிய தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மீது ஒரு ஓட்டுநர் டிரக்கை செலுத்தினார். இதில் 86 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரான்சின் 60 லட்ச இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள தற்போதைய சோகம், அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 16-ம் தேதி, ஆசிரியர் சாமுவேல் பாட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து நைஸில் உள்ள நோட்ரே-டேம் தேவாலயத்தில் 60 வயது பெண் மற்றும் இரண்டு பேர் மீது நடைபெற்ற தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை, அப்பட்டமான காட்டுமிராண்டித்தனம் என்றும், இது பிரான்சையும் அதன் மக்களையும் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது.

இஸ்லாமியர்களை குறிவைக்கும் இம்மானுவேல் மக்ரோன்

சாமுவேல் பாட்டியின் கொலைக்குப் பின்னர் நடந்த கருத்துக் கணிப்பில் 79% பேர் பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியரசின் மீது “இஸ்லாம், போரை அறிவித்ததாக” நம்புகிறார்கள். இன்னும் பலர் பிரான்சின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அஞ்சினர்.

ஒரு சமூகத்தில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர் குடியேறியவராக இருக்கும்போது, பிரெஞ்சு நபராக இருப்பது என்றல் பிரெஞ்சு நபரைப் போல் நடிப்பது என்று பொருள். மத அடையாளத்தை அல்லது உறுதிப்பாட்டை பொது இடங்களில் வெளிப்படுத்தாமல் இருப்பது தான் மதச்சார்பின்மை என்று கருதப்படும். அது பிரெஞ்சு கத்தோலிக்க மதமாக இல்லாத வரை இந்த விதிகள் தான் பொருந்தும்.

பிரான்சில் நடைபெறும், ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலின் போதும், அங்குள்ள இஸ்லாமியர்களுக்குப் பிரெஞ்சு குடிஅரசு மீதான விசுவாசம் மற்றும் அதன் மதிப்புகள் குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலை ஏற்படுகின்றது.

சாமுவேல் கொல்லப்பட்டதற்கு பிறகு, இஸ்லாமிய நம்பிக்கையின் பிரெஞ்சு கவுன்சில், இஸ்லாமிய மக்களின் நிலைப்பாட்டைக் குறித்து தெளிவுபடுத்த விரும்பியது. “இஸ்லாமியம் என்று கூறிக்கொள்ளும் தீவிரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதம், துன்பங்களை நினைவூட்டுகிறது, இது நமது சோகமான யதார்த்தத்தை குறிக்கிறது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சாமுவேல் பாட்டிக்கான தேசிய விழாவின் போது ஒரு உணர்ச்சிபூர்வமான உரையில், மக்ரோன் இதே போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார் “இஸ்லாமியவாதிகளுக்கு நம் எதிர்காலம் தேவை. சாமுவேல் பாட்டி போன்ற அமைதியான ஹீரோக்கள் இருக்கும்போது அவர்கள் ஒருபோதும் அதைப் பெற மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் தான் சாமுவேல் பாட்டி கொல்லப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இம்மானுவேல் மக்ரோன் கூறியது பெரும்பாலான பிரெஞ்சு மக்களின் கருத்துக்கு ஏற்ப இருந்தாலும், இது பிரான்சின் இஸ்லாமியர்களை ஒரு மூலையில் தள்ளுகிறது. அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் வரை அவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை.

துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், இம்மானுவேல் மக்ரோனை கண்டித்து அவரது மன நலனைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், “ஜனாதிபதி மக்ரோன், மேலும் பிரிவினையை அதிகரித்து தீவிரமயமாக்கலுக்கு வழிவகுக்காமல் அதனை சரிசெய்து தீவிரவாதிகளுக்கான இடத்தை மறுத்திருக்கலாம்” என்று அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய பாகிஸ்தானின் பிரதமர்  “பிரெஞ்சு அதிபரின் பேச்சு பிரான்சில் இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்துவதற்கு வழிவகுக்கும். பயங்கரவாதிகளையும் சாதாரண முஸ்லிம் குடிமக்களையும் பிரான்ஸ் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறது?” என இம்மானுவேல் மெக்ரானிடம் கேள்வி எழுப்பினார்.

(www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்