Aran Sei

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல், அதில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகள் என்று சாயம் பூசவே மத்திய அரசு முயற்சிக்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 14) சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், “விவசாய சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம்  தலையிட்ட பின்பும் விவசாயிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் பேச்சைக் கூட விவசாயிகள் மதிப்பதில்லை என்று இனிமேல் மத்திய அரசு சொல்லக்கூடும். இப்போது கேள்வி உச்ச நீதிமன்றத்தின் மீதான மரியாதை அல்ல, நாட்டின் வேளாண் கொள்கையைப் பற்றியது. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றுதான் விவசாயிகளின் குரலாக இருக்கிறது. ஆனால், முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கையில்தான் உள்ளது.” என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

ஆனால், போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு அவர்களை அவமானப்படுத்துகிறது என்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவசாயிகள் போராட்டத்துக்குள் நுழைந்தால்,அதுகூட மத்திய அரசின் தோல்வியாகத்தான் இருக்கும் என்றும் சாம்னா குற்றஞ்சாட்டியுள்ளது.

“மத்திய அரசுக்கு, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர விருப்பம் இல்லை.அவர்கள் தேசவிரோதிகள் என்று சாயம் பூசிக் காட்ட மத்திய அரசு முயற்சி செய்கிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் மேல் வைத்துவிட்டது. போராடும் விவசாயிகள் டெல்லி எல்லையில் இருந்து வீடு திரும்பியவுடன், விவசாய சட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடைகளை மத்திய அரசு நீக்கி, விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவிடாத வகையில் தடுக்கும்.” என்று விமர்சித்துள்ளது.

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

விவசாயிகள் மனநிலை என்பது செய் அல்லது செத்துமடி என்ற ரீதியில் இருக்கிறது என்றும்  உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை ஒருவேளை விவசாயிகள் ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான விவசாயிகளை துரோகிகள் என்று மத்திய அரசு அழைக்குமா என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ’சாம்னா’வின் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்