காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துத்துவா போக்குடன் செயல்படுகிறது. இதனால், தான் அந்த கட்சியால் சித்தாந்த ரீதியான சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் பாசிச, இந்துத்துவ திட்டத்தைப் பாஜக முறையாகவும் வேகமாகவும் முன்னெடுத்து வருகிறதால், அந்த கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற மாநாட்டின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீதாராம் யெச்சூரி, “கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி கணிசமான அளவு பலவீனமடைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் உள்ள பலர் காங்கிரஸ் கட்சியை ஒரு அச்சுறுத்தலாக கருதுவதில்லை. ஏனெனில், காங்கிரஸ் இருக்கும் தலைவர்கள் எந்த நேரத்திலும், அதில் இருந்து விலகிப் பாஜகவில் இணையலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி தேர்தல்: பாஜகவை தோற்கடித்தால்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் – அகிலேஷ் யாதவ்
அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஒரு வலுவான இடது சாரி கூட்டணி தேவை என யெச்சூரி கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசைப் பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுவதாக குற்றம்சாட்டிய யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் ’சமரச மனப்பான்மை’ பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் முயற்சிக்கு உதவாது என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”இடது சாரிகள் சித்தாந்தம் ஒரு ஆபத்தான சித்தாந்தம். அவர்கள் தத்துவத்தின் வெற்றி முறியடிக்கபட வேண்டும்” என கூறிஇருந்தார்.
சாதியக் குற்றங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் கைது – விடுதலை செய்ய எடிட்டர்ஸ் கில்ட் கோரிக்கை
இதை மேற்கோள் காட்டிய யெச்சூரி, “ஏனெனில், இடது சாரிகள் மட்டுமே கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எந்த சமரசமும் இல்லாமல் பாஜகவை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.