Aran Sei

கொரோனாவால் சீத்தாராம் யெச்சூரியின் மகன் மரணம் : ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 22) சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “இன்று காலை என்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை கொரோனா தொற்றுக்கு பறிகொடுத்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘கொரோனா தடுப்பூசி தொற்றை தடுக்காது; ஆனால், உங்கள் உயிரை காக்கும் ’ – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர்

34 வயதான ஆஷிஷ் யெச்சூரி, டெல்லியில் உள்ள குர்கானில் தனியார் மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை முன்னேறிவருவதாகக் கருதப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 22) காலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் ஆசிஷ் பணியாற்றிவந்தார்.

ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்தக் கடினமான சூழலில் தோழர் சீதாராம் யெச்சுரிக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்