Aran Sei

‘பாஜகவை பண்பாட்டு ரீதியாகவும் கருத்தியல் அடிப்படையிலும் தனிப்படுத்த வேண்டும்’ -சீதாராம் யெச்சூரி

பாஜக அரசு ஆர்எஸ்எஸ் இன் பாசிச வேலைத் திட்டத்தை இடைவிடாமல் முன்னெடுத்து வருவதாகவும், பாஜகவைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்க இடதுசாரி கட்சிகளும், நாட்டில் உள்ள மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்க்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரைன் டிரைவ் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டைத் துவக்கி வைத்த பொழுது சீதாராம் யெச்சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி: டெல்லி விரைந்த சந்திரசேகர் ராவ்

தேர்தல் வெற்றிக்காக மட்டும் பாஜகவைத் தனிமைப்படுத்தி விடக்கூடாது. இந்துத்துவா வேலைத் திட்டத்திற்கு எதிராகவும் மிக வலுவான அரசியல், கருத்தியல், அமைப்புமுறை மற்றும் பண்பாட்டு பரப்புரைகளின் அடிப்படையில் அவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

“எங்கள் பணி இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையை அழிக்கும் நாசகர சக்திகளுக்கு எதிராக நிற்பதும்தான். ஒரு மாற்றுச் செயல்திட்டத்தின் மூலம் இடதுசாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் வலுப்படுத்த வேண்டும். பாஜகவைத் தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆனால் சீதாராம் யெச்சூரி தனது உரையில், கேரளாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸைப் பற்றி ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. காங்கிரஸின் ‘மென்மையான இந்துத்துவா நிலைப்பாடு’ காரணமாக, காங்கிரஸுடன் எந்த விதமான கூட்டணியையும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்