Aran Sei

‘இது பிராமணர்களுக்கான முகாம், எஸ்.சி/எஸ்.டிகளுக்கு இல்லை’ – மோடி பின்பற்றும் தடுப்பு மருந்து கொள்கையின் விளைவிது என சீதாராம் யெச்சூரி விமர்சனம்

credits : the newindian express

பெங்களூருவில் பிராமணர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட தடுப்பு மருந்துமுகாமானது, மனித உரிமைகளும், மனித மாண்பிற்கும் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கும் எதிரான செயல் என்றும் தடுப்பு மருந்து முகாமின் அமைப்பாளர்கள் மீது, வழக்கு பதிவதோடு, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலிறுத்தியுள்ளார்.

நேற்று (ஜூன் 6), மருத்துவர் அனிந்தியா கார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள ட்வீட்டில், “பெங்களூருவில் எஸ்சி / எஸ்டி மக்களிடம் அவர்களின் சாதி குறித்து கேட்கப்பட்டுள்ளது. இது பிராமணர்களுக்கு மட்டுமான தடுப்பு மருந்து முகாம் என்று கூறி, அவர்களுக்கு தடுப்பு மருந்து மறுக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்துவதிலும் உள்ள நிறவெறியானது, வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை மட்டுமல்ல, இது ஆதிக்க சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்குமான இடையேயான பிரச்சனையும் கூட.” என்று தெரிவித்துள்ளார்.

‘பிராமணர்களுக்கு எதிரான தமிழக அரசை கலைக்க வேண்டும்’ – ஆளுநருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

இந்த ட்வீட்டை மறுபகிர்வு செய்துள்ள சீதாராம் யெச்சூரி, “இது வெறுக்கத் தக்க செயல். மோடியின் தடுப்பு மருந்து கொள்கையின் முடிவானது – பாகுபாடானதும், சமமற்றும், பிளவுபடுத்துவதுமான வகையிலும் உள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “மனித உரிமைகளும், மனித மாண்பிற்கும் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரான இந்தச் செயலைச் செய்த இந்த தடுப்பு மருந்து முகாமின் அமைப்பாளர்கள் மீது, வழக்கு பதிவதோடு, கடுமையாக தண்டிக்க வேண்டும். இலவச தடுப்பு மருந்து முகாம்களை நாடு முழுவதும் இப்போது தொடங்க வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்