Aran Sei

தொழிலாளர் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர் மரணம்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நெப்பத்தூர் பகுதியில், செங்கல் சூளையில் தொழிற்சங்கம் அமைக்கப்பா டுபட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொடுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெப்பத்தூர் பகுதியில் ராஜஸ்தானை சார்ந்த சேட்டு சுரேஸ் என்பவர் ஏறத்தாழ 27 வருடங்களாக RKP என்ற மிகப்பெரும் செங்கல் சூளை நடத்திவருகிறார்.

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

இந்தச் சூளையில் நெப்பத்தூரைச் சார்ந்த சீனிவாசன் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் சூலை ஆரம்பிக்கப்பட்டக் காலத்திலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாவே கூலி உயர்வு மற்றும் PF, ESI போன்ற இதர சலுகைகள் கேட்டுப் போராடியும் வந்துள்ளதுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக அந்தச் செங்கல் சூளையின் உரிமையாளரோடு முரண்பாடு நிலவி வந்ததாக அறியமுடிகிறது.

சுமார் 10-ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூளையில் ’RKP தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் தொழிலாளர் நல சங்கத்தைத் துவக்கியதாகவும், இந்தச் சங்கத்தில் மரணமடைந்த தொழிலாளர் சீனிவாசன் தற்போது இச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூளை உரிமையாளர் சேட்டு சுரேஸ் உடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக சீனுவாசன் கடந்த மூன்று மாத காலமாக வேலைக்குச் செல்வதை தவிர்த்து வந்ததாகவும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீனுவாசன் உரிமையாளர் சேட்டு சுரேஸிடம் தொழிலாளர் ஒருவருக்கு முறைப்படி சேரவேண்டிய சலுகைகளைக் கேட்டிருக்கிறார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டிருந்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் – தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

இந்நிலையில், 17.04.2021 விடியற்காலை சுமார் அதிகாலை 3: 00 மணியளவில்
சீனிவாசன் அலைபேசிக்கு சேட்டு சுரேசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் மீண்டும் வேலைக்கு அழைத்ததாகவும், தொழிலாளருக்குரிய அனைத்து உரிமைகளையும் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

அன்று காலை 6 மணியளவில் சீனுவாசன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவிக்குத் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இந்நிலையில், சூளையில் சீனுவாசனை அடித்துக் கொலை செய்து அதை மறைக்கக் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது போல அந்த சூளையின் உரிமையாளர் தொங்கவிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து திருவெண்காடு காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் இறந்தவரின் சடலத்தைச் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தி கலைத்துள்ளனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

தகவல் : அருள் முத்துக்குமரன் , சிதம்பரம் ; நேதாஜி, நெப்பத்தூர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்