Aran Sei

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மாணவர் உடலை தமிழகம் கொண்டு வர உதவ வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டில்  பயிற்சி மருத்துவர் பணிக்காகச் சென்றிருந்தபோது   உயிரிழந்த   மருத்துவமாணவர் அஸ்வினின்  உடலைப் பொருட்செலவின்றி,  தமிழ்நாடு கொண்டுவர  நடவடிக்கை எடுக்கவேண்டுமென   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்   தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் கோரியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சார்ந்தவரான மாணவர் அம்பலவாணன்  அஸ்வின்   மருத்துவப்படிப்பு இறுதியாண்டு முடித்த நிலையில் ,  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நார்த் வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சி மருத்துவர் பணிக்காக[CLERKSHIP] சென்றிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 9 அன்று,  பயிற்சிப்பணிக்கு  சேருவதன் ஒரு பகுதியாக ஹெபா பி மற்றும் எம்.எம்.ஆர் ஆகிய தடுப்பு மருந்துகள் செலுத்திக்கொண்டு உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1௦ அன்று காலை அவர் படுக்கையிலிருந்து அவர் எழாத நிலையில்,  படுக்கையிலேயே அவர்  உயிரிழந்திருந்தது   தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர்,   அம்பலவாணன்  அஸ்வின் இறப்பிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும்,  அதுமட்டுமின்றி அவரது உடல் தற்போது வரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும்  கூறியுள்ளனர்.

அதுமட்டுமட்டுமல்லாமல், மருத்துவமாணவர் அம்பலவாணன்  அஸ்வினின் குடும்பம் அவரது உடலைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து  செலவுக்குச் செலவிட இயலாத மிகுந்த வறுமை நிலையில்  உள்ளதாகவும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் தங்களது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவரது உடலைப் பொருட்செலவின்றி  தமிழ்நாடு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம்   தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பிலிப்பைன்ஸ் அரசிடமிருந்து அஸ்வின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்