Aran Sei

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்

credits : 7news

ந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லி எல்லையில், விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியது முதலே, ஆஸ்திரேலியாவில், சீக்கியர்களுக்கும், இந்திய அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் பதட்டம் நிலவத் தொடங்கியதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகராமான சிட்னியில், இந்திய அரசின் ஆதரவாளர்களால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை நடப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் மற்றும் புலம் பெயர் இந்தியர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், காரில் சென்று கொண்டிருந்த சீக்கியர்களை வழிமறித்து, அடையாளம் தெரியாத நபர்கள் பேஸ்பால் மட்டைகளாலும், சுத்தியலாலும் கொடூரமாக தாக்கியுள்ளதாக, ஆஸ்திரேலியாவின் 7 நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த தாக்குதலில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பித்தாலும், கார், கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னரும் கூட சிலர், சீக்கியர் ஒருவரை தெருவின் நடுவில் வைத்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

ஆஸ்திரேலியாவின் சட்ட ஒழுங்கை அமல்படுத்தும் அதிகாரிகள், ”இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியிலிருந்தே சீக்கியர்களுக்கும், இந்திய அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் பதற்றம் தொடங்கியது” என கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் பயன்தரும் – சர்வதேச விவசாயிகள் சங்கங்கள்

சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பல உணவகங்கள் மற்றும் கோயில்கள், அரசியல் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சிக்கி தவிப்பதாக அவர்கள் கூறியுள்ளதாகவும், வன்முறை மற்றும் சூறையாடல் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இரு குழுக்களுக்கிடையில் சமரசம் செய்ய முயற்சிக்க உள்ளூர் அதிகாரிகள் சமூகத் தலைவர்களை அணுகியுள்ளனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவிடம் பேசுங்கள் – கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

 

”இது அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் சண்டையிடுவது போல் உள்ளது” என்று, லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் கமல் சிங் தெரிவித்துள்ளதாக 7 நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்