பிப்ரவரி 2 ஆம் தேதி சுதர்சன் நியூஸ் என்ற ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தது. அந்தக் காணொளியில் சீக்கியர் ஒரு பேருந்தை வாள் கொண்டு தாக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் அந்தப் பதிவில் ”தேசம் எல்லாவற்றையும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது… இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை மட்டுமல்ல… அவர்களை ஆதரிப்பவர்களையும் தான்… #IndiaAgainstPropanganda #KhalistaniExposed”. இந்தக் காணொளியை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.
बड़े धैर्य के साथ देश देख रहा है ये सब कुछ…
सिर्फ करने वालों को नहीं…
उनका साथ भी देने वालों को..#IndiaAgainstPropaganda#KhalistaniExposed pic.twitter.com/GrX6fEaWg5— Sudarshan News (@SudarshanNewsTV) February 4, 2021
இதே காணொளியை 40 ஆயிரம் பாலோயர்களை கொண்ட ’ஹரியானா ரோட்வேஸ்’ என்ற முகநூல் பக்கமும் பகிர்ந்திருந்தது. காணொளியைப் பகிர்ந்த அந்தப் பதிவில் சீக்கியர் பேருந்து ஓட்டுநரைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவை 70 லட்சம் நபர்கள் பார்த்திருந்தனர்.
உண்மை சரிபார்ப்பு
இந்தக் காணொளியின் உண்மைத்தன்மை அறிய ’ஆல்ட்நியூஸ்’ மேற்கொண்ட தேடலில், இந்தச் சம்பவம் 2019 ஆம் செப்டம்பர் மாதம் நிகழ்ந்ததாகவும், இதை ’இந்தியா நியூஸ் பஞ்சாப் லைவ்’ என்ற ஊடகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவெற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
தி டிரிபியூன் இணையதளம் வெளியிட்ட செய்தியில், செப்டம்பர் 19, 2020 ஆம் தேதி இணையத்தில் வைரலான அந்தக் காணொளி, ஜாதா (ஆயுதமேந்திய சீக்கிய குழு)-வின் குதிரைகளில் ஒன்றை தற்செயலாகப் பேருந்து மோதியதற்காக, நிஹாங் சீக்கிய ஆண்கள் பேருந்தைத் தாக்கியதாகவும், அந்தச் சீக்கியர்களால் தாக்கப்பட்ட பேருந்து, பெப்சு சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி) கபுர்தலா பணிமனைக்கு சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி விவரிவாகச் செய்தி வெளியிட்டிருந்த ஜாக்ரான் இந்தி ஊடகம், காவல்துறை எழுத்துப்பூர்வமாகப் பதியப்பட்ட புகாரில், செப்டம்பர் 14, 2019 ஆம் தேதி, பிஆர்டிசி யின் கபுர்தாலா பணிமனைக்கு சொந்தமான பேருந்தை (பிபி09-எக்ஸ்-3613) நகோதரிலிருந்து கபுர்தலா நோக்கி ஓட்டுநர் நிர்மல் குமார் (சிகே-382) ஓட்டி வந்தபொழுது, தாலி குருத்வாரா பகுதியின் அருகே சுன்னதா பாலத்தின் வந்தபோது சம்பவம் நடைபெற்றதாகவும், பேருந்து மோதியதில் ஜாதா -வின் குதிரைகளில் ஒன்று காயமடைந்ததாகவும், இதனால் சீக்கியர்கள் பேருந்தைத் தாக்கியதாகவும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
”புகார் மற்றும் வைரலான வீடியோவின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நான்கு நிஹாங்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும், அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எந்த ஜாதாவுடன் தொடர்புடையவர்கள் என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், வரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” எனக் காலா சங்கியான் எஸ்எஸ்ஐ பல்பீர் சிங் கூறியதாக அமார் உஜாலா செய்தி வெளியிட்டுருந்தது.
”கபுர்தலா பணிமனை இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்க விரும்பவில்லை” எனக் கபுர்தலா எஸ்எஸ்பி சதீந்தர் சிங் தி ட்ரிப்பூனிடம் தெரிவித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகள் பழைய காணொளியை, விவசாயிகள் போராட்டத்தோடு, சுதர்சன் நியூஸ் தவறாகத் தொடர்புபடுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.