Aran Sei

கட்டாயமதமாற்றம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்புகள் – சுயவிருப்பப்படி மதம்மாறியதாகப் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்த பெண்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகச் சீக்கிய அமைப்புகள் குற்றம்சாட்டிய விவகாரத்தில் ஒரு பெண் தான் சுயமாகவே மதம் மாறியதாக உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீக்கிய அமைப்பைச் சார்ந்தவர்கள், தங்கள் சமூகத்தைச் சார்ந்த இரு பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்துவது தொடர்பான வழக்கு – பொய் தகவல்கள் வெளியிட்டதை ஒப்புக் கொண்ட முக்கிய குற்றவாளி

மேலும், நீதிமன்ற வளாகத்தின் வெளியே சீக்கிய அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஒரு சீக்கிய பெண், தான் சுயசிந்தனையோடே மதம் மாறியதாகவும், அதுபோன்றே திருமணம் செய்து கொண்டதாகவும் பிரமாணப்பாத்திரம் தாக்கல் செய்ததாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண் மற்றும் அவரது கணவர்மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாதாது எனவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி புனித யாத்திரை நடத்தும் உத்தரகண்ட் அரசு – மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்குமோ?

இதே போன்று, கட்டாய மதமாற்றத்துக்கு ஆளானதாகக் கூறப்பட்ட மற்றொரு 18 வயதுடைய பெண் 45 வயதுடைய ஆணை மணந்துள்ளதாகவும் , அவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தையுள்ள நிலையில் தற்போது இவரை மணந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டதாகவும்
அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், அந்தப் பெண்ணை அவரது குடும்பத்திடம் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு என்ன செய்ய நினைத்தாலும் எங்கள் உரிமைக்கான போராட்டம் தொடரும் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைவர்கள் சூளுரை

இதுகுறித்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில அனைத்து சீக்கியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெக்மோகன் சிங் ரெய்னா,”மாநிலத்திற்கு வெளியுள்ளவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இந்தச் சம்பவத்தை இன்னும் மோசமடைய செய்ய விரும்புகிறார்கள். ஏற்கனவே, இந்தப் பகுதிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். நாங்கள் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தோடு எங்களுக்கு நல்ல உறவு உள்ளது” என்று ம் கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்