Aran Sei

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

Image Credits: India Legal

த்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் கைவிலங்கிடப்பட்டு , கழிவறைக்கு கூட செல்ல அனுமதி மறுப்படுவதாக முஸ்லீம் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று, ஹத்ராஸ் நகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானை அம்மாநிலஅரசு உபா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 20 அன்று குளியல் அறையில் வழுக்கி விழுந்த அவரை மதுராவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை அங்கு காவல்துறை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிப்பதில்லை, கையில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் பாட்டிலிலேயே சிறுநீர் கழித்து வருவதாக அவரது மனைவி ரைஹானா காப்பான் தெரிவித்துள்ளார்.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,”அவருக்கு 10 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் அடிக்கிறது, குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்தாலாவது அவர் சிறுநீர் கழிக்கவாவதுக் கூடும் ஆனால் மருத்துவமனையில் அதற்கும் கூட உரிமை மறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

மேலும், மருத்துவமனை நிர்வாகத்திடம் நீங்கள் பேசினால் எல்லாம் சரியாக இருப்பதாக சொல்வார்கள். ஆனால் என் கணவர் தொலைபேசி வாயிலாக இதை தெரிவித்தார் என்றும் ரைஹானா காப்பான் குறிப்பிட்டுள்ளார்.

source; muslim mirror

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்